Virat Kholi | Royal Challengers Bangalore | Chennai Super Kings | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறும் 68-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) - சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணிகள் விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தற்காலிகமாக் நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நின்றவுடன் ஆட்டம் மீண்டும் ஆட்டம் 8:25 மணிக்கு தொடங்கப்பட்டது.
ஒரே மைதானத்தில் 3000 ரன்கள் - கோலி புதிய சாதனை!
இந்நிலையில், இந்தப் போட்டி தொடங்கி நடைபெற்ற போது, 9 பந்துகளை எதிர்கொண்ட பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 1 பவுண்டரி 2 சிக்ஸர்களை விளாசி 19 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், ஐ.பி.எல் (இந்தியன் பிரீமியர் லீக்) வரலாற்றில் ஒரே மைதானத்தில் (பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியம்) 3000 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் 2295 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஒரே இடத்தில் அதிக ரன் எடுத்த 2வது வீரராக உள்ளார்.
தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் வீரர் ஏபி.டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் ஒரே இடத்தில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான அவர் சின்னசாமி ஸ்டேடியத்தில் 1960 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் 29 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் கோலி அவுட் ஆனார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“