Advertisment

மேட்ச் ரெஃப்ரி சரியில்லை; கோலிக்கு தடை விதிக்க வேண்டாமா? இங்கிலாந்து மாஜி வீரர் கோபம்

India VS England Test Series: இந்திய அணி கேப்டன் விராட்கோலிக்கு 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிடு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
மேட்ச் ரெஃப்ரி சரியில்லை; கோலிக்கு தடை விதிக்க வேண்டாமா? இங்கிலாந்து மாஜி வீரர் கோபம்

England Former Cricketer Say AboutIndian Captain Virat kohli : இந்திய அணி கேப்டன் விராட்கோலிக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன், பயிற்சியாளர், மற்றும் வர்ணனையாளராக டேவிட் லாய்டு தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், கடந்த 13-ந் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்த போட்டியில் 3-வது நாளில் இந்திய பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் இங்கிலாந்து கேப்டன், ஜோ ரூட் கால் பேடில் பந்து பட்டதால் எல்.பி.டிபிள்யூ கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் நிதின் மேனன் அவுட் தர மறுத்துவிட்டார். இதனால் அதிருப்பதியடைந்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி, நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தார். ஆனால் பந்தின் நிலையை சோதனை செய்த 3-வது நடுவர் அம்பயரின் முடிவு இறுதியானது என தெரிவித்துள்ளார். இதனால் ஜோரூட் அவுட்டில் இருந்து தப்பித்தார். ஆனால் கோபமடைந்த கேப்டன் விராட்கோலி நடுவர் நிதின்மேனனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கேப்டன் விராட்கோலியின் இந்த செயலை கண்டித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கடும் விமர்சனம் செய்த நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் வாகன் மற்றும் நாசர் உசேன் ஆகியோர் விராட்கோலிக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாய்டு, டெய்லி மெயிலுக்கான தனது கட்டுரையில்,  ஒரு தேசிய அணியின் கேப்டன் ஆடுகளத்தில் ஒரு அம்பயரை விமர்சிக்கவும், துன்புறுத்தவும், மிரட்டவும், கேலி செய்யவும் எப்படி அனுமதிக்க முடியும்? கோஹ்லி நிச்சயமாக அடுத்த வாரம் அகமதாபாத்தில் நடைபெறும்  விளையாடக்கூடாது. மேலும் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும்.

ஏ/சி அறையில் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீநாத் ஒரு வார்த்தை கூட இதைக் கண்டிக்கவில்லை. மூன்றரை நாட்கள் ஸ்ரீநாத் எதுவும் கூறவில்லை. அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Virat Kohli India England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment