Virat Kohli Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தொடருக்கான சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், இந்தியாவை பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அரைசதம் விளாசி நட்சத்திர வீரர் கோலி 60 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கு பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நட்சத்திர வீரர் விராட் கோலி, தான் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் தனக்கு 'மெசேஜ்' அனுப்பியது தோனி ஒருவர் தான் என்று உண்மையை உடைத்து பேசியுள்ளார்.
"நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் எம்எஸ் தோனியிடம் இருந்து தான் எனக்கு மெசேஜ் கிடைத்தது. வேறு யாரிடமிருந்தும் இல்லை. எனது செல்போன் எண் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், யாரும் எனக்கு 'மெசேஜ்' அனுப்பவில்லை. தோனி மீது நான் கொண்டுள்ள மரியாதை மற்றும் இணைப்பு உண்மையானது. என்னால் அவர் பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை. அதேபோல், அவரால் நான் பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை" என்று விராட் கோலி கூறியுள்ளார்.
பாபர் அசாம் பற்றிய கோலியின் கருத்து
“பாபர் மிகவும் நல்ல மனிதர். அவர் என்னை விட மிகவும் இளையவர். அதனால் எனக்கு உறவில் உறுதியாக தெரியவில்லை (சிரிக்கிறார்). ஆனால் அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவர் எப்பொழுதும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு பேசினார். அவர் வெளிப்படையாக மிகவும் திறமையான வீரர். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் அவர் இப்படி விளையாடுவதில் ஆச்சரியமில்லை. அவர் மட்டுமல்ல. மற்றவர்களும் கூட. அவர்கள் அனைவரும் மிகவும் இனிமையானவர்களாக இருக்கிறார்கள். இரு அணியினரும் நன்றாகப் பழகுகின்றனர். மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த அணி. ஆனால் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்கின்றனர். ”என்று கோலி கூறினார்.
இந்திய வீரர் அர்ஷ்தீப் பற்றி கோலி குறிப்பிட்டது:
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் 18வது ஓவரில் முக்கியமான கேட்சை கைவிட்ட இளம் அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக விராட் கோலி பேசியிருந்தார்.
“நான் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக எனது முதல் ஆட்டத்தில் விளையாடியபோதும், நான் மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனேன். காலை 5 மணி வரை மைதானத்தின் மேற்கூரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். அழுத்தத்தில் யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம்.
இப்போது அணியின் சூழல் சிறப்பாக உள்ளது, இதற்கான பெருமை நிர்வாகத்திற்கும் கேப்டனுக்கும் செல்கிறது. எனவே ஒருவர் தனது தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நிவர்த்தி செய்து மீண்டும் அந்த அழுத்த சூழ்நிலையில் இருப்பதை எதிர்நோக்க வேண்டும், ”என்று விராட் கோலி கூறினார்.
💬💬 "We have a healthy team environment and I'd like to give credit to the Captain and team management for the same," @imVkohli on the team morale 👍#AsiaCup2022 pic.twitter.com/nvJ3jA3kNs
— BCCI (@BCCI) September 5, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.