Advertisment

பெங்காலியில் சரளமான பேசிய கோலி... வாயை பிளந்த வங்கதேச வீரர் - இணையத்தை கலக்கும் வீடியோ!

வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் மிராஸிடமிருந்து சிறப்புப் பரிசைப் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது பெங்காலி பேசும் திறமையை வெளிப்படுத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Virat Kohli Speaks In Bengali After Receiving Special Gift From Bangladesh Star Mehidy Hasan Miraz  Video Goes Viral Tamil News

கோலி சரளமாக பெங்காலி பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற்றன.இதனை  2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்தது. 

Advertisment

இந்நிலையில், கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் மிராஸிடமிருந்து சிறப்புப் பரிசைப் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது பெங்காலி பேசும் திறமையை வெளிப்படுத்தினார். அவர் சரளமாக பெங்காலி பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

மிராஸ் தனது நிறுவனத்தின் பேட் ஒன்றை கோலிக்கு பரிசாக அளித்தார். அப்போது கோலி பெங்காலி மொழியில் பதிலளித்தார். "இது மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். உங்கள் சிறப்பான பணியைத் தொடருங்கள்"  என்று மிராஸ் பேட் கொடுத்ததற்கு புன்னகையுடன் கூறினார் கோலி. 

முன்னதாக, மிராஸ் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தனது நிறுவனத்தின் ஒரு பேட்டை பரிசாக வழங்கினார். இந்த பரிசில் மகிழ்ச்சியடைந்த ரோகித் வங்கதேச அணிக்கு வாழ்த்துக் கூறினார். "மெஹிடியை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். அவர் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். மேலும் அவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சொந்தமாக பேட் நிறுவனத்தை தொடங்கியிருப்பதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் அவருக்கு எல்லா நல்வாழ்த்துக்களையும் விரும்புகிறேன், கடவுள் அவருக்கு எல்லா வெற்றிகளையும் தரட்டும். மேலும் இந்த நிறுவனம் அனைவரையும் விட உயரும் என்று நம்புகிறேன்" என்று ரோகித் கூறினார். 

முன்னதாக, கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் தனது குறிப்பிடத்தக்க டெஸ்ட் வாழ்க்கைக்காக வங்கதேச முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு கோலி தனது கிரிக்கெட் பேட்டை பரிசளித்தார். வாய்ப்பு கிடைத்தால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரே சொந்த மண்ணில் கடைசி தொடராக இருக்கும் என ஷகிப் அறிவித்துள்ளார். இல்லையெனில், இந்தியாவுக்கு எதிரான தொடர் அவருக்கு பிரியாவிடை தொடராக அமையும்.

கான்பூரில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஷகிப், "நான் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராக இருக்கிறேன், ஆனால், சொந்த மண்ணில் நிறைய நடப்பதால், இயற்கையாகவே, எல்லாமே என்னைச் சார்ந்தது அல்ல. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான எனது திட்டங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் உடன் விவாதித்தேன். குறிப்பாக இந்தத் தொடர் மற்றும் சொந்தத் தொடர், பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தேன். இது எனது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கலாம். 

நான் [வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர்] ஃபாருக் பாய் மற்றும் தேர்வாளர்களிடம் கூறியுள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் மற்றும் என்னால் விளையாட முடிந்தால், எனது கடைசி டெஸ்ட் மிர்பூரில் இருக்கும். அதே நேரத்தில் நான் விளையாடுவதையும் பாதுகாப்பாக உணர்கிறேன் என்பதையும் உறுதிப்படுத்த வாரியம் முயற்சிக்கிறது. நான் வங்கதேசத்தின் குடிமகன், அதனால் நான் வங்கதேசத்திற்குச் செல்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது என்று நான் கவலைப்படுகிறேன் அதற்கு ஒரு தீர்வு இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்." என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Virat Kohli Rohit Sharma Indian Cricket Team India Vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment