பாக்ஸிங் டே டெஸ்ட்... கிரிக்கெட் உலகமே உற்று நோக்கும் போட்டியான இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை மறுதினம் (டிச.26) தொடங்குகிறது.
மேலும் படிக்க - 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 7 வயது லெக் ஸ்பின்னர்
இந்தப் போட்டியில் வெற்றிப் பெற இரு அணிகளும், தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்திய அணியின் ஓப்பனிங் மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் சூழ்நிலையில், லோகேஷ் ராகுலுக்கு பதிலாக உள்நாட்டில் சாதனைகள் பல குவித்து வைத்திருக்கும் மாயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல், ஹனுமா விஹாரிக்கு ஓப்பனிங் வாய்ப்பு கிடைக்குமா? நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்து திரும்பி வந்திருக்கும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த நிலையில், கேப்டன் விராட் கோலி, தனது அடுத்த சாதனையை நோக்கியுள்ளார். இன்னும் 82 ரன்கள் எடுத்தால், ஒரே ஆண்டில் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ராகுல் டிராவிட்டின் சாதனையை கோலி முறியடிப்பார்.
முன்னதாக, கடந்த 2002ம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட், 1137 ரன்கள் குவித்திருந்தார். இதுநாள் வரை, டிராவிட்டின் இச்சாதனை தான் நம்பர்.1. ஆனால், இன்னும் 82 ரன்கள் எடுத்துவிட்டால், கோலி அதனை முறியடித்து விடுவார். கோலி இந்தாண்டு வெளிமண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 1056 ரன்கள் எடுத்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் நடந்த 3 டெஸ்ட் போட்டியில் 286 ரன்கள், ஆவரேஜ் 47.67
இங்கிலாந்தில் நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டியில் 593 ரன்கள், ஆவரேஜ் - 58
என்று அசத்தியிருக்கிறார் கோலி.
டிராவிட் அந்தச் சாதனையை படைத்த போது, கோலியின் வயது 14. இப்போது, தனது 30வது வயதிலேயே, கோலி அந்தச் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். இன்னும், என்னென்ன ரெக்கார்ட்ஸ-லாம், யார் யாருடைய ரெக்கார்ட்ஸ-லாம் தகர்த்து எறியப் போகிறாரோ!