Virat Kholi | IPL 2024 | T20 World Cup 2024 | Indian Cricket Team | Royal Challengers Bangalore: இந்திய மண்ணில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் விவாத பொருளாகி வருகிறது. இந்த சீசனில் 10 போட்டிகளில் ஆடி 71.43 சராசரி மற்றும் 147.49 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 500 ரன்களை எடுத்துள்ள அவர் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 63.62 சராசரி மற்றும் 146.69 ஸ்ட்ரைக் ரேட் என 509 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Is Virat Kohli’s strike rate a concern? Ajit Agarkar says Team India think tank has not been discussing it
நவீன டி20 போட்டிகளில் தேவைப்படும் இன்னிங்ஸை விரைவுபடுத்த முடியாத குறைவான பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் கொண்ட கோலி மற்றும் ரோகித் ரோகித் சர்மா ஆகிய இரண்டு வீரர்கள் இந்தியாவுக்குத் தேவை தானா? என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது, விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்தும், அது அவர்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது.
விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்த கேள்விக்கு பதிலளித்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், "நாங்கள் அதைப் பற்றி (விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்) விவாதிக்கவில்லை. அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அதனால், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. நீங்கள் உலகக் கோப்பைக்கு செல்ல இருக்கிறீர்கள். ஆதலால், அணியில் இன்னும் இடைவெளி இருக்கிறது. அங்குதான் அனுபவம் மிகவும் முக்கியமானது. ஐ.பி.எல் போல போட்டிகள் அமைந்தால், 220 ரன்கள் குவிக்கும் ஆடுகளம் போல் இருந்தால், அதனை எடுக்க நம்மிடம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். உலகக் கோப்பை போட்டிகள் என்றாலே, அங்கு இருக்கும் அழுத்தம் வேறுபட்டது, ”என்று அவர் நியாயப்படுத்தினார்.
விராட் கோலியே தனது ஸ்டிரைக் ரேட் மீதான ஆய்வு குறித்து சமீபத்தில் பேசியிருந்தார். "ஸ்டிரைக் ரேட்கள் மற்றும் நான் நன்றாக ஸ்டிரைக்கை மாற்றி விளையாடுவது பற்றி பேசும் அனைவரும் இந்த விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, இது அணிக்கான கேம்களை வெல்வது பற்றியது, நீங்கள் 15 ஆண்டுகளாக அதைச் செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது, நீங்கள் இதை தினந்தோறும் செய்துள்ளீர்கள், உங்கள் அணிகளுக்கான கேம்களை வென்று இருக்கிறீர்கள்.
வர்ணனை பெட்டியில் உட்கார்ந்து கொண்டு எனது விளையாட்டைப் பற்றி பேசும் நீங்கள், அதுபோன்ற சூழ்நிலையில் இருந்திருப்பீர்களாக என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் அனுமானங்களைப் பற்றி நாள்தோறும் பேசலாம். ஆனால், அதைச் செய்தவர்களுக்குத் தான் களத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும்." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.