Indias first CWC 2023 wicket: இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடந்துவருகின்றன. இந்த போட்டியில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்துவருகிறது. இதில், நாட்டின் முதல் விக்கெட்டை ஜாஸ்பிரீத் பும்ரா வீழ்த்தினார். அவரின் பந்துவீச்சில் மிட்செல் மார்ஷ் ஸ்லீப்பில் நின்ற விராத் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
இந்தப் போட்டியில் முதலில் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு பும்ரா, சிராஜ் ஆகியோர் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.
ஆட்டத்தின் 2.2ஆவது ஓவரில் பும்ரா மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 199 ரன்கள் அடித்த நிலையில் இழந்தது.
தற்போது இந்திய அணி பேட்டிங் செய்துவருகிறது. இந்தியாவின் வெற்றிக்கு 29 ஓவர்களில் 118 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. இந்தியா 21 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 84 விழுக்காடு வாய்ப்புள்ளதாக நிகழ்தகவுகள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“