விராட் கோலியின் மாபெரும் பலம் அவரது அபார பேட்டிங் தான் என்று சொல்லலாம். ஆனால், உண்மையில் சொல்லப்போனால் அவரது ஃபிஸிக் தான் எப்போதும் நம்பர்.1
விராட் ஒரு பக்கா அத்லெட். பிறகு தான் இந்த கிரிக்கெட், பேட்டிங், ரன்கள் எல்லாம். அவரால் இப்போது கிரிக்கெட்டும் விளையாட முடியும், ஹர்டில்ஸ் போட்டியிலும் எகிற முடியும். 'நான் கிரிக்கெட்' ஸ்போர்ட்ஸில் இருந்திருந்தாலும், அதிலும் அவர் கிங்காகவே இருந்திருப்பார்.
அதனால் தான் அணியின் சக வீரர்களிடமும் எப்போதும் அவர் ராவான ஃபிட்னஸ் எதிர்பார்க்கிறார். அவரைப் பார்த்து மற்ற வீரர்களும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதும் நடக்கிறது. குறிப்பாக லோகேஷ் ராகுல்.
ஆனால், ரோஹித் உடம்பு நாளுக்கு நாள் ஏறி வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்.... நேற்று (செப்.18) மொஹாலியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், விராட் கோலியின் அத்லெட் ஃபிட்டுக்கு சான்றாக அமைந்த கேட்ச் இது,
அதுவும் அரைசதம் அடித்து மாஸ் டெம்போவில் இருந்த தென்.ஆ., கேப்டன் டி காக்கிற்கு இந்த கேட்ச்சை பிடித்து, அந்த அணியின் ரன் ரேட்டை குறைக்க முக்கிய காரணமாக அமைந்தார் அத்லெட் கோலி.