Advertisment

'99% போன் எடுக்க மாட்டார்… கடினமான நேரத்தில் 2 முறை மெசேஜ் பண்ணுனார்': தோனி குறித்து நெகிழ்ந்த கோலி

போனில் அழைத்தால் 99 சதவிகிதம் போனை எடுக்காத தோனி, தனது கடினமான நேரத்தில் தன்னை 2 முறை தொடர்பு கொண்டதாக கோலி கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Virat Kohli talks about MS Dhoni in RCB Podcast Tamil News

Virat Kohli says MS Dhoni reached out to him twice. (File)

Kohli opens up on relationship with Dhoni Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வருபவர் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி. அவருக்கும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கும் இடையான நட்பு குறித்து பலமுறை பொதுவெளியில் கூறி சிலாகித்துள்ளார். அந்த அளவிற்கு தோனி மீது தனி மரியாதையும், அன்பும், பாசமும் கொண்டவராக கோலி உள்ளார். அவருடன் கோலி 2008 மற்றும் 2019 க்கு இடையில் 11 ஆண்டுகள் டீம் இந்தியா டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி அதன் போட்காஸ்டில், விராட் கோலியுடனான நேர்காணலை வெளியிட்டுள்ளது. 2வது சீசனின் 10 எபிசோட்களில் முதல் எபிசோட்டில் பேசிய கோலி, தோனி உடனான தனது நட்பு, ஆர்.சி.பி மற்றும் இந்தியாவை வழிநடத்திய நேரம், கேப்டன் பதவியில் இருந்து ஒரு மூத்த வீரர் என்ற ரோலுக்கு மாறுவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவரது தீவிர அர்ப்பணிப்பு குறித்து உரையாடியுள்ளார்.

publive-image

இந்நிலையில், முன்னாள் கேப்டன் தோனி குறித்து பேசிய கோலி, தனது கடினமான நேரத்தில் தன்னை இரண்டு முறை அவர் தொடர்பு கொண்டதாகவும், அவரது செய்தி தான், தன்னை ஓரிரு அடிகள் பின்னோக்கி எடுத்து தனது நல்வாழ்வைப் புரிந்து கொள்ள உணர்த்தியது என்றும் தெரிவித்துள்ளார்.

"சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எனக்கு ஏற்பட்ட கடிமான நேரத்தில், நான் இருந்த அந்த சூழலில், அனுஷ்கா மற்றும் என்னுடைய சிறுவயது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினரைத் தவிர… உண்மையாக என்னை அணுகிய ஒரே நபர் எம்எஸ் தோனி மட்டுமே. அவர் தான் என்னை முதலில் அணுகினார்.

அவரை நீங்கள் அரிதாகவே தொடர்பு கொள்ள முடியும். எதேச்சையான நாளில் நான் அவரை போனில் அழைத்தால், 99 சதவிகிதம் அவர் போனை எடுக்க மாட்டார். ஏனென்றால் அவர் போனைப் பார்ப்பதில்லை. எனவே, அவர் என்னைத் தொடர்புகொள்வது கடினம். இப்போது இரண்டு முறை அது நடந்துள்ளது, என்னை அணுகும் போது அவர் செய்தியில் குறிப்பிட்டது என்னவென்றால்: 'நீங்கள் வலிமையானவராக எதிர்பார்க்கப்படும்போது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க தனிப்பட்ட நபர்கள் மறந்து விடுகிறார்கள்.'

publive-image

எனவே, அந்த செய்தி (தோனியின் வார்த்தைகள்) எனது மனதைத் தொட்டது. ஏனென்றால் நான் எப்போதும் மிகவும் நம்பிக்கையுள்ள, மன வலிமையுள்ள, எந்த சூழ்நிலையையும் தாங்கி, வழியைக் கண்டுபிடித்து எங்களுக்கு வழி காட்டக்கூடிய ஒருவனாக எப்போதும் பார்க்கப்படுகிறேன். சில நேரங்களில், நீங்கள் புரிந்துகொள்வது என்னவென்றால், ஒரு மனிதனாக வாழ்வின் எந்த நேரத்திலும் நீங்கள் இரண்டு படிகள் பின்வாங்க வேண்டும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், உங்கள் நல்வாழ்வு எவ்வாறு வைக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, பல இடங்கள் இல்லை, நீண்ட காலமாக விளையாட்டை விளையாடியவர்களுக்கு, வலுவான நபர்களாக, அவர்கள் மற்றவருக்கு புரியும் வகையில் சென்று விளக்கலாம். அதனால்தான் இந்த குறிப்பிட்ட சம்பவத்தை நான் குறிப்பிட்டேன். ஏனென்றால் எம்எஸ் தோனிக்கு என்ன நடக்கிறது என்பது சரியாகத் தெரியும், அவர் அதைப் புரிந்துகொள்கிறார், ஏனெனில் அவரம் அந்த இடத்தில் இருந்தவர்.

publive-image

நான் இப்போது அனுபவித்ததை அவர் அப்போது அனுபவித்திருக்கிறார். எனவே, இது அனுபவத்திற்கு அப்பாற்பட்டது, அந்த தருணத்தில் அந்த உணர்வுகளை அனுபவிப்பதுதான், அதே விஷயத்தைச் சந்திக்கும் மற்றொரு நபரிடம் நீங்கள் உண்மையிலேயே இரக்கமாகவும் புரிந்து கொள்ளவும் முடியும்." என்று கூறி விராட் கோலி நெகிழ்ந்துள்ளார்.

15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில், கோலி இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 106 டெஸ்ட், 271 ஒருநாள் மற்றும் 115 டி20 போட்டிகளில் விளையாடி 25,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இப்போட்டியானது வருகிற மார்ச் 1ம் தேதி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடக்கிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Virat Kohli Anushka Sharma Sports Cricket Indian Cricket Team Ms Dhoni Indian Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment