Virat Kohli Tamil News: ஸ்மார்ட் போன்கள் வருகையால் சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் சினிமா நட்சத்திரகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை பலரும் கணக்கு துவங்கிய ஆக்டிவாக உள்ளனர். இவர்கள் அதிகம் ஆக்டிவாக இருக்கும் வலைதள பக்கமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இந்த இன்ஸ்டா பக்கத்தில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட பிரபலங்களுக்கு பணம் கொடுத்து தங்கள் நிறுவன தயாரிப்புகளை விளம்பரம் செய்யுமாறு சில நிறுவனங்கள் கூறுவது வழக்கம். இந்த பிரபலங்களும் அந்த நிறுவனத்திற்கான விளம்பரத்தை தங்கள் இன்ஸ்டா பக்கத்தின் மூலம் செய்கிறார்கள்.

இப்படி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வதன் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதை Hopper HQ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பிறரின் பெயர்கள்களும் இடம் பிடித்துள்ளது.

இந்த பட்டியலின் முதல் இடத்தில கால்பந்து ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். 295 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்டுள்ள இவர் ஒரு விளம்பர போஸ்ட்க்கு ரூ. 11,9 கோடி வாங்குகிறார். 2வது இடத்தில் மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ட்வெய்ன் ஜான்சன் (ராக்) உள்ளார். 3வது இடத்தில் பாப் பாடகர் அரியானா க்ரநேட் உள்ளார்.

இந்த பட்டியிலில் உள்ள ஒரே இந்திய கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். 19வது இடம் பிடித்துள்ள இவர் ஒரு விளம்பர போஸ்ட் போட ரூ. 5 கோடி வாங்குகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 125 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள மற்றொரு இந்தியராக பாலிவுட் திரையுலக பிரபலம் நடிகை ப்ரியங்கா சோப்ரா உள்ளார். 64 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்டுள்ள இவர், கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 19வது இடத்தில் இருந்தார். ஆனால் இந்தாண்டுக்கான பட்டியலில் 27வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இருப்பினும், இன்ஸ்டாவில் ஒரு விளம்பர போஸ்ட்க்கு ரூ. 3 கோடி வாங்குகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“