Virat Kohli Tamil News: தென்ஆப்பிரிக்கா மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த புதன்கிழமை பார்ல் நகரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே பார்ல் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் வீரர் ரிஷாப் பண்ட் 85 ரன்களும் (71 பந்துகள், 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்), கேப்டன் ராகுல் 55 (79) ரன்களும் சேர்த்தனர்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்தது.
இதனைத் தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில், தொடக்க வீரர்கள் ஜனனிமான் மாலன் (91) – குயின்டன் டி காக் (78) ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 48.1 வது ஓவரிலே நிர்ணயிக்கப்பட்ட 288 ரன்கள் என்கிற இலக்கை எட்டியது. மேலும், அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. எனவே, தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது.
That's that from the 2nd ODI.
— BCCI (@BCCI) January 21, 2022
South Africa win by 7 wickets and take an unassailable lead of 2-0 in the three match series.
Scorecard – https://t.co/CYEfu9Eyz1 #SAvIND pic.twitter.com/TBp87ofgKm
டிரஸ்ஸிங் ரூமில் நடனமாடிய விராட் கோலி
இந்த ஆட்டத்தில், தொடக்க வீரர் தவான் (29) ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட் கோலி, 4 பந்து பந்துகளை சந்திருந்த நிலையில் டக் அவுட் (0) ஆகி வெளியேறினார். ஒருநாள் போட்டிகளில் கோலி இப்படி டக் அவுட் ஆகுவது இது 14 வது முறையாகும்.
இப்படி ஒரு சோக சம்பவம் அரங்கேறி இருந்த நிலையில், டிரஸ்ஸிங் ரூமில் கோலி கூலாகவே காணப்பட்டார். மேலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பண்டின் பேட்டிங்கை ரசித்து கொண்டிருந்தார். அதோடு, ஆண்டிலே பெஹ்லுக்வாயோவின் பந்துவீச்சில் பண்ட் பவுண்டரியை விரட்டிய போது, கோலி உட்கார்ந்து கொண்டே நடனமாடினார்.

அப்போது அவருடன் இந்திய டக்அவுட்டில் அமர்ந்திருந்த தவான், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா, கோலியின் நடன அசைவுகளை பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.
Virat kohli is such a mood 🤣✨ pic.twitter.com/yjC6XTlJIw
— Siddhi 🙂 (@_sectumsempra18) January 21, 2022
கோலி நடமாடும் இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“