Advertisment

'கேப்டனாக இல்லை; ஒரு தலைவனாக இருப்பேன்' - விராட் கோலி பேட்டி!

Former indian cricket captain virat kohli latest interview Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் விராட் கோலி, தலைவராக இருக்க நீங்கள் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Virat Kohli Tamil News: Not captain any more, but will remain a leader

Virat Kohli Tamil News: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்னணி கேப்டனாக வலம் வந்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. 3 வகை பார்மெட்டுகளிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த இவர் தனக்கு இருக்கும் பணிச்சுமை கருத்தில் கொண்டு டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனினும், தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

Advertisment

ஆனால், ஒயிட்- பால் கிரிக்கெட்டில் இரண்டு கேப்டன்கள் இருப்பது நல்லதல்ல என முடிவு செய்த பிசிசிஐ தேர்வுக்குழு, கோலியிடம் இருந்து ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை பறித்து, மூத்த வீரர் ரோகித் சர்மாவிடம் கொடுத்தது. ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக நியமிக்க்கப்பட்டிருந்த ரோகித் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடரலாம் என்று தேர்வுக்குழு தெரிவித்து இருந்தது.

publive-image

சர்ச்சை – விவாதம்

தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன் கோலியை ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக டிசம்பர் 8ம் தேதி ( சுற்றுப்பயணம் செல்லும் முன்) அன்று கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

publive-image

அப்போது அவர் தன்னை ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது குறித்து முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்றும், தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒருநாள் தொடருக்கு தான் எப்போதும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தவிர, கோலி பிசிசிஐ தலைவர் குறித்து பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலும், பொதுத்தளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியது.

டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து திடீர் ராஜினாமா

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக கோலி அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களியே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இது குறித்து தற்போது வரை பிசிசிஐ எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

publive-image

தலைவராக இருக்க கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை

இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து சமீபத்தில் நிகழச்சி ஒன்றில் பேசிய விராட் கோலி, "தலைவராக இருக்க ஒரு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அணியை மேலும் வெற்றிபெறச் செய்ய ஒரு பேட்ஸ்மேனாக நிறைய பங்களிக்க முடியும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Virat kohli Tamil News: no intimation were given before being dropped as ODI captain

இது குறித்து மேலும் அவர் பேசுகையில், "எல்லாவற்றுக்கும் ஒரு காலவரையறை இருக்கும். அதனை நாம் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல் கேப்டன் பதவியில் இருந்து விலகி செல்வதும், அதற்கான முடிவை சரியான தருணத்தில் எடுப்பதும் தலைமை பண்பின் ஒரு அங்கமாகும். தலைவராக இருக்க நீங்கள் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அணியின் கேப்டனாக இல்லாத நேரத்திலும் தோனி அணியின் தேவைக்கு எல்லாவிதமான ஆலோசனையும் வழங்கினார்.

தோனியின் கேப்டன்ஷிப்பில் ஆடிய பிறகே நான் கேப்டன் பொறுப்பை ஏற்றேன். எப்போதும் எனது மனநிலை ஒரே மாதிரி தான் இருக்கிறது. நான் அணியின் ஒரு வீரராக இருந்தாலும் எப்போதும் கேப்டனை போல் தான் சிந்திக்கிறேன். அணி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு இன்னும் நிறைய பங்களிக்க முடியும் என்று கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Virat Kohli Sports Cricket Indian Cricket Team Indian Cricket Captain Virat Kholi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment