Cricket Tamil News: தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டுடன் கேப்டன் கோலி அதிக நேரத்தை செலவிட்டு வரும் நிலையில், ராகுல் ட்ராவிட் - இளம்வயது விராட் கோலி புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகல்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்னணி கேப்டனாக வலம் வந்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. 3 வகை பார்மெட்டுகளிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த இவர் தனக்கு இருக்கும் பணிச்சுமை கருத்தில் கொண்டு டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனினும், தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், ஒயிட்- பால் கிரிக்கெட்டில் இரண்டு கேப்டன்கள் இருப்பது நல்லதல்ல என முடிவு செய்த பிசிசிஐ தேர்வுக்குழு, கோலியிடம் இருந்து ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை பறித்து, மூத்த வீரர் ரோகித் சர்மாவிடம் கொடுத்தது. ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக நியமிக்க்கப்பட்டிருந்த ரோகித் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடரலாம் என்று தேர்வுக்குழு தெரிவித்து இருந்தது.
சர்ச்சை - விவாதம்
கோலியை தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்பாக ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக டிசம்பர் 8ம் தேதி ( சுற்றுப்பயணம் செல்லும் முன்) அன்று கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தன்னை ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது குறித்து முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்றும், தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒருநாள் தொடருக்கு தான் எப்போதும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தவிர, கோலி பிசிசிஐ தலைவர் குறித்து பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலும், பொதுத்தளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் - வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி
இந்த நிலையில், தற்போது தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்காவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கோலிக்கு ஓய்வு
தற்போது இவிவிரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. கேப்டன் கோலி ஏற்பட்டுள்ள முதுகுவலி காரணமாக அவர் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் கேஎல் ராகுல் கேப்டனாக அணியை வழிநடத்துகிறார்.
2வது டெஸ்டில் இதுவரை….
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கே எல் ராகுல் அரைசதம் கடந்தார். அவர் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்.
தென்ஆப்பிரிக்கா அணியில் மேர்கோ ஜேன்சண் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்சில் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
STUMPS on Day 2 of the 2nd Test.#TeamIndia 202 & 85/2, lead South Africa (229) by 58 runs.
Scorecard - https://t.co/qcQcowgFq2 #SAvIND pic.twitter.com/OwcK1xZ7YW— BCCI (@BCCI) January 4, 2022
இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரே இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவருடன் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
From Centurion to Johannesburg 🏟️
The tradition continues 👌👌#TeamIndia #SAvIND pic.twitter.com/NWjFlDMAhQ— BCCI (@BCCI) January 4, 2022
தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல் 8 ரன்களுடனும் மற்றும் மயங்க் அகர்வால் 23 ரன்களுடனும் அவுட் ஆனார்கள். தற்போது வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. மேலும், தென்ஆப்பிரிக்கா அணியை விட 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
டிராவிட் - கோலி வைரல் புகைப்படம்
தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதுகு வலி காரணமாக ஓய்வு எடுத்துள்ள கேப்டன் கோலி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். அவருடன் கலந்து ஆலோசிப்பது போன்ற புகைப்படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், கேப்டன் கோலி தனது இளம் வயதில் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Coach and Skipper..Pic of their young age.. looking lovely🤩🥰❤️ pic.twitter.com/1XMRsMO9Gt
— RS Chase Master King😎 (@ImGRS18Viratian) January 3, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.