Virat Kohli Tamil News: இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் அணிகள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. இதனால் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில், இந்த இரு அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி அடுத்த மாதம் (ஜூன்) 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் போட்டி நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணியினர் மும்பையில் தனிமப்படுத்துதலில் உள்ளனர்.
இந்த தனிமப்படுத்துதல் நாட்களை செம ஜாலியாக கழித்து வரும் இந்திய கேப்டன் விராட் கோலி, சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக உள்ளார். சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்த கால்பந்தை கிரஸ்பார் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டது.
இந்த நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது அவரது ரசிகர்களிடமிருந்து பலவிதமான கேள்விகளை எடுத்து பின்னர் அவரது ஸ்டோரி ரீல்களில் பதிலளித்திருந்தார் கேப்டன் கோலி.
ஒரு ரசிகர் தனது கேள்வியில், கேப்டன் கூல் உடனான உங்களது நட்புறவை 2 வார்த்தைகளில் விவரிக்கும்படி ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அதற்கு கேப்டன் கோலி நம்பிக்கை மற்றும் மரியாதை பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் தனது கேள்வியில், சமீபத்திய உங்கள் கூகுள் தேடல் எது? என்று கேட்டிருந்தார். அதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று பதிலளித்துள்ளார் கேப்டன் கோலி.

கேப்டன் கோலி தனது ஸ்டோரி ரீல்களில் பகிர்ந்திருந்த கேள்விகள் மற்றும் பதில்கள் இங்கே…



















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)