”மனைவி அனுஷ்காதான் என் வெற்றிகளுக்கு காரணம்”: உலக சாதனை படைத்த விராட்

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 500 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக பெருமையை பெற்ற விராட் கோலி, தன் வெற்றிக்கு காரணம் மனைவி அனுஷ்கா தான்...

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 500 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக பெருமையை பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தன் வெற்றிக்கு காரணம் தனது மனைவி அனுஷ்கா தான் காரணம் என தெரிவித்தார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 35வது சதம் அடித்தார். 6 போட்டிகளிலும் மொத்தமாக சேர்த்து 500 ரன்கள் எடுத்து விராட் கோலி உலக சாதனை படைத்தார்.

இந்த சாதனை குறித்து பேசிய விராட் கோலி, “எனக்கு மிக நெருக்கமானவர்களே இந்த வெற்றிக்குக் காரணமானவர்கள். இந்த போட்டி முழுவதும் என் மனைவி அனுஷ்கா எனக்கு உறுதுணையாக இருந்தார். அதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எனக்கு முன்னிருந்து நீ (அனுஷ்கா) என்னை வழிநடத்த வேண்டும், அதுதான் அற்புதமான உணர்வு.”, என கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close