இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவேன் என்று விராட் கோலி அறிவித்துள்ளாஅர். நான் ஐ.பி.எல்.ல்லில் விளையாடும் கடைசி போட்டி வரை பெங்களூரு அணிக்காகவே விளையாடுவேன். இதுநாள் வரையில் என்னை நம்பி எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்று விராட் கோலி அறிவித்துள்ளார்.
Advertisment
இந்தியாவின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக பதவி வகித்து வரும் விராட் கோலி, அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை டி20 போட்டிகளுக்கு பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை தந்துள்ளார் விராட் கோலி.
கடந்த சில காலமாக என்னுடைய மனதில் இருக்கும் இந்த முடிவு குறித்து இன்று மாலை ஆர்.சி.பி. நிர்வாகத்துடன் பேசினேன். என்னுடைய பணி சுமையை குறைப்பதற்காக டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தேன். எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் கடைமைகளை பொறுப்புடன் நிறைவேற்ற என்னை ரிஃப்ரெஷ் செய்து கொள்ள நேரம் தேவை என்று நான் கருதினேன். 9 ஆண்டுகள் சிறப்பான பயணமாக இருந்தது. எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி. இது முடிவு அல்ல. இந்த பயணம் தொடரும். நன்றி என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை ஆர்.சி.பி. தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil