"விராட்... பயிற்சிக்கு ரெடியாகாம இங்க என்ன பண்றீங்க?" - கோலியின் பதிவும், ரசிகர்களின் விமர்சனமும்!

ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை

ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
virat kholi instgram video

virat kholi instgram video

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை(ஜன.15) அடிலைடில் தொடங்க உள்ளது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தது.

Advertisment

ஆஸ்திரேலியாவின் 289 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் 0, கேப்டன் கோலி 3, அம்பதி ராயுடு 0 என அடுத்தடுத்து அவுட்டானதால், நான்கு ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தள்ளாடியது. அதன்பின், தோனியின் 51, ரோஹித்தின் 133 ரன்கள் இந்திய அணியை 'வெற்றிகரமான  தோல்வி'க்கு இட்டுச் செல்ல உதவியதே தவிர, வெற்றிப் பெற வைக்க முடியவில்லை.

தொடக்க வரிசை வீரர்களின் சொதப்பலால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், நாளை அடிலைடில் இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

இந்த நிலையில், கேப்டன் விராட் கோலி இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் அவுட்டிங் சென்ற போது எடுத்த புகைப்படத்தை ஹார்ட் எமோஜியுடன் தனது ட்விட்டரில் நேற்று பகிர்ந்தார். இந்தப் புகைப்படம் குறித்து ரசிகர்கள் சிலர், விராட் மீதான விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த பதிவுக்கு "என்ன விராட்.... இரண்டாவது போட்டிக்கு பயிற்சி செய்யவில்லையா?, போட்டிக்கு தயாராகுங்கள், பெர்த் போட்டிக்கு பிறகு நீங்கள் ஃபார்மில் இல்லை... மீண்டு வாருங்கள்" என்று கமெண்ட் செய்துள்ளனர்.

ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு வீரரால் எப்போதும் சிறப்பாக விளையாடிக் கொண்டே இருக்க முடியுமா? என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சில சமயங்களில் சறுக்கல்கள் வருவது இயல்பு. அதற்காக, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை கமெண்ட் செய்வது என்பது தவறான அணுகுமுறையே!.

Virat Kohli India Vs Australia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: