scorecardresearch

மனி ஹேஸ்ட் ப்ரோபஸ்ஸரை நினைவூட்டும் கேப்டன் கோலியின் ‘நியூ லுக்’

Virat Kohli’s look in Money Heist professor goes viral in social Tamil News: தாடியுடன் காணப்படும் கேப்டன் கோலியின் புதிய லுக் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், சிலர் அவரை பிரபல நெட்ஃபிலிக்ஸ் தொடரான மனி ஹேஸ்ட் ‘ப்ரோபஸ்ஸர்’ என்றும், சிலர் கபீர் சிங் திரைப்படத்தில் வரும் ‘ஷாஹித் கபூர்’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Virat kohli viral photos Tamil News: Virat Kohli's look in Money Heist professor goes viral in social

Virat kohli viral photos Tamil News: கிரிக்கெட் உலகில் முன்னணி கேப்டன்களில் ஒருவராக வலம் வரும் கேப்டன் விராட் கோலி, மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ரசிகர்களை ஈர்க்கும் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார். இவரது பேட்டிங் ஸ்டைல் மட்டுமல்லாது ஹேர் ஸ்டைலை கூட இவரின் ரசிகர்கள் வெறித்தனமாக பாலோ செய்கிறார்கள் என்றால் மிகையாகாது.

தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய கேப்டன் கோலி, பெருந்தொற்றல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மனைவி அனுஷா சர்மாவுடன் நிதி திரட்ட துவங்கினார். அப்போது சமூக ஊடகங்களில் தோன்றிய கேப்டன் கோலி, அதன் பிறகு தாங்கள் எதிர்பார்த்த நிதி கிடைத்து விட்டதாக கடந்த 14ம் தேதி மனைவியுடன் வெளியிட்ட வீடியோவில் தான் தோன்றினார்.

இந்த நிலையில், அந்த வீடியோவில் தோன்றிய 10 நாட்களில் கேப்டன் கோலி லுக் மாறிவிட்டது. தற்போது அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அதில் தாடியுடன் காணப்படும் கேப்டன் கோலியை, சிலர் பிரபல நெட்ஃபிலிக்ஸ் தொடரான மனி ஹேஸ்ட் ‘ப்ரோபஸ்ஸர்’ என்றும், சிலர் கபீர் சிங் திரைப்படத்தில் வரும் ‘ஷாஹித் கபூர்’ என்றும் கமெண்ட் வருகின்றனர்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும் இந்த புகைப்படத்திற்கு கேப்டன் கோலியின் ரசிகர்கள் சிலர் லைக்ஸ் மழை பொழிய, சிலர் தங்கள் கமெண்டுகளை தட்டிச் சென்றுள்ளனர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அமைத்த டீம் இந்தியா குமிழில் சேருவதற்கு முன்னதாக கேப்டன் கோலி மும்பையில் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறார். ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காகவும், இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காகவும் கிரிக்கெட் வீரர்கள் ஜூன் 02 அன்று இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனுக்கு பறக்க உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Virat kohli viral photos tamil news virat kohlis look in money heist professor goes viral in social

Best of Express