Virat kohli viral Video Tamil News: சமீபத்திய சர்வதேச தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணியை திறம்பட வழிநடத்திய கேப்டன் விராட் கோலி, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் களம் கண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். இருப்பினும் போட்டியில் கலந்து கொண்ட சில வீரர்களுக்கும், அணி நிர்வாகத்தினர் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவே தொடரை தற்காலிமாக நிறுத்துவதாக பிசிசிஐ அறிவித்தது.
இதற்கெல்லாம் சிறிதும் மனம் துவளாத கேப்டன் கோலி, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தனது மனைவி அனுஷ்காவுடன் இணைந்து நிதி திரட்டினார். அவரின் இந்த புதிய முயற்சிக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்ததோடு, 11 கோடிக்கு மேல் நிதியும் கிட்டியது.
தற்போது, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகாகவும், தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காவும் கேப்டன் கோலி மற்றும் இந்திய அணியினர் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கால்பந்து எத்தி விளையாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கேப்டன் கோலி. அந்த வீடியோவின் கேப்ஷனில் 'ஆக்சிடன்டால் கிராஸ்பார் சேலஞ்' என்று பதிவிட்டுள்ளார்.
Accidental crossbar challenge 😂 pic.twitter.com/koeSSKGQeb
— Virat Kohli (@imVkohli) May 25, 2021
சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, 'உங்களிடம் பயிற்சி மேற்கொள்ள உள்ள சேஷன்களுக்கு 'இன்வாய்ஸ்' (invoice) அனுப்பட்டுமா? அல்லது ஈஸி தவணைகளில் செலுத்தட்டுமா? என விளையாட்டாக கேட்டுள்ளார்.
Saare coaching sessions ka ek hi invoice bheju, ya aasan kishton mein chukaoge, champ? 😉 https://t.co/i98I9a9Nmq
— Sunil Chhetri (@chetrisunil11) May 25, 2021
தற்போது, மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய அணியினர் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லவுள்ள நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் 18 அல்லது 19 ஆம் தேதிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் அக்டோபர் 9 அல்லது 10 ஆம் தேதிகளில் இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
"பி.சி.சி.ஐ அனைத்து பங்குதாரர்களிடமும் பேசியுள்ளது, மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 18 முதல் 20 தேதிகளுக்குள் தொடங்கும். செப்டம்பர் 18, 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், வார இறுதி தேதியில் போட்டிகளை மீண்டும் போட்டிகளை தொடங்க விரும்புவார்கள் ”என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2021 தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் முன்னர், 7 ஆட்டங்களில் 5 வெற்றிகளை பெற்ற ஆர்சிபி அணி, அட்டவணையில் 3வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.