News about Virat Kohli, Gautam Gambhir in tamil: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் குறைவில்லாமல் நடந்து வரும் இந்த தொடரில் சர்ச்சைகளும், பிரச்சனைகளும் பஞ்சமில்லாமல் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதில், கடந்த திங்கள்கிழமை (மே 1ம் தேதி) லக்னோ மண்ணில் நடந்த லீக் ஆட்டத்தில் இரு முன்னணி இந்திய வீரர்களுக்கு இடையே முண்ட வார்த்தைப் போர் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது.
மோதல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய அந்த ஆட்டத்தில் பெங்களுருவின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே நடந்த மோதல் போக்கு கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி போட்டி அமைப்பாளர்களையும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி இருக்கிறது.

அபராதம்
இதை தொடர்ந்து போட்டி விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக விராட்கோலி, கவுதம் கம்பீர் ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதத்தையும், நவீன் உல்-ஹக்குக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தையும் ஐ.பி.எல். நிர்வாகம் அபராதமாக விதித்தது. இதனால் விராட்கோலிக்கு ரூ.1 கோடியும், கம்பீருக்கு சுமார் ரூ.25 லட்சமும் இழப்பு ஏற்படும்.
கடிதம்
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோலி கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அவர் எழுதிய கடிதத்தில், தான் நிரபராதி என்றும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கோலி கூறியுள்ளார். மேலும், 100% போட்டிக் கட்டணம் அபராதமாக வசூலித்ததற்காக பிசிசிஐ அதிகாரிகளிடம் பெரும் ஏமாற்றம் அடைந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil