Advertisment

ஓபனராக கோலி- ஜெய்ஸ்வால்... ரோகித்தை நம்பர் 4-ல் ஆட சொல்லும் வாசிம் ஜாஃபர்!

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி -யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓபனராக களமிறங்க வேண்டும் என்றும், ரோகித் சர்மா நம்பர் 4-ல் பேட் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Virat Kohli Yashasvi Jaiswal should open and Rohit Sharma should bat at four in T20 World Cup Wasim Jaffer Tamil News

டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தொடர்பாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

T20 World Cup 2024 | Indian Cricket Team: 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வருகிற ஜூன் 2 முதல் 29 வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்காக தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Advertisment

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரை அடைந்துவிட்டனர். இந்திய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது வருகிற ஜூன் 5 ஆம் தேதி தொடங்குகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம்  ஜூன் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.  

வாசிம் ஜாஃபர் கருத்து

டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தொடர்பாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில், இந்திய அணிக்கு ஓபனராக விராட் கோலி -யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்க வேண்டும் என்றும், ரோகித் சர்மா  நம்பர் 4-ல் பேட் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Virat Kohli-Yashasvi Jaiswal should open and Rohit Sharma should bat at four in T20 World Cup says Wasim Jaffer

"என் கருத்துப்படி, கோலி மற்றும் ஜெய்ஸ்வால் உலகக் கோப்பையில் ஓபனராக களமிறங்க வேண்டும். நமது அணிக்கு கிடைக்கும் தொடக்கத்தைப் பொறுத்து ரோகித் மற்றும் சூரியகுமார் யாதவ் நம்பர் 3 மற்றும் 4 இடங்களில் பேட் செய்ய வேண்டும். ரோகித் ஸ்பின் பவுலிங்கை நன்றாக விளையாடுகிறார். எனவே, 4-வது இடத்தில் பேட்டிங் செய்வதை அவர் ஒரு கவலையாக எடுத்துக்கொள்ளக்கூடாது, ”என்று ஜாஃபர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரோகித் நான்காவது இடத்தில் இந்தியாவுக்காக எட்டு முறை பேட்டிங் செய்துள்ளார். அவரது சராசரி 31.33 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 122.88 என நன்றாக உள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக கோலியின் சராசரி 57.14 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 161.29 ஆக இருக்கிறது. 

யுவராஜ் சிங்-கின் விக்கெட் கீப்பர் தேர்வு 

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக உள்ளனர். இதில், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐ.பி.எல்-லில் இதுவரை 155.52 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில், 52.10 என்ற சராசரியில் 521 ரன்களை எடுத்துள்ளார். இந்த நிலையில், இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக எந்த வீரர் களமிறங்க வேண்டும் என்று தனது தேர்வை யுவராஜ் சிங் வெளிப்படுத்தியுள்ளார். 

ஐ.சி.சி-யிடம் பேசிய யுவராஜ், "நான் அநேகமாக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்வேன். சஞ்சுவும் சிறந்த ஃபார்மில் இருக்கிறார், ஆனால் ரிஷப் ஒரு இடது கை வீரர். இந்தியாவுக்காக ரிஷப் வெற்றி பெறுவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன், அவர் கடந்த காலத்தில் செய்ததைப் போன்றே இம்முறையும் செய்வார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் நிறைய, அவர் பெரிய போட்டிகளில் மேட்ச்-வின்னராக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்." என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

T20 World Cup 2024 Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment