விராட் கோலி இரட்டை சதம் அடித்து உலக சாதனை

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 2 வது நாளான இன்று விராட் கோலி இரட்டை சதம் அடித்துள்ளார். இது அவரது ஆறாவது இரட்டை சதமாகும்.

By: Updated: December 3, 2017, 11:54:32 AM

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 2 வது நாளான இன்று விராட் கோலி இரட்டை சதம் அடித்துள்ளார். இது அவரது ஆறாவது இரட்டை சதமாகும்.

இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி, நேற்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்திய வீரர் முரளி விஜய் 155 ரன்களும், கேப்டன் விராட் கோலி 156 ரன்களையும் முதல் நாள் சேர்த்தனர். 2ம் நாள் ஆட்டத்தின் போது, ஹோலியும், ரோஹித் சர்மாவும் களம் கண்டனர்.

முதல் நாள் போலவே தனது விவேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், விராட் கோலி. ஆட்டம் தொடங்கிய சில நேரங்களிலேயே அடித்து விளையாட ஆரம்பித்தார், விராட் கோலி. அவர் 195 பந்துகளை சந்தித்து தனது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். அப்போது இலங்கை பந்துவீச்சாளர், அவுட் கேட்டனர். ஆனால், அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

விராட் கோலி இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதங்களை பதிவு செய்துள்ளார். நாக்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 213 ரன்கள் எடுத்தார். விராட் கோலி, டெஸ்ட் போட்டியில் இதுவரை 6 இரட்டை சதங்களை பதிவு செய்துள்ளார். இந்திய வீரர்கள் சச்சின், சேவாக் ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதுவரை ஒரு அணியின் கேப்டனாக இருப்பவர்கள், 6 இரட்டை சதங்களை பதிவு செய்ததில்லை. அந்த வகையில் அவர் உலக சாதனையைப் படைத்துள்ளார்.

உலக சாதனை படைத்த இந்திய கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் இன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Virat kohlis double century to beat world record

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X