Virat Kohli Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 2021 ஆம் ஆண்டில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர், 2022 ஆம் ஆண்டில் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். அவரை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து பி.சி.சி.ஐ விலக்கியது. இதன்பிறகு, தற்போது கோலி ஒரு சாதாரண வீரராகவே அணியில் விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக 3 ஃபார்மெட்டுகளிலும் களமாடி வரும் கோலி 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அவர் தனது ஃபார்மை மீட்டெடுத்து சிறப்பாக உள்ளார். இதனால் அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல், அவரை சமூக வலைதள பக்கங்களில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அசுர வளர்ச்சியை பெற்று வருகிறது.
பிரபல சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் கோலியை 253 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இதன்மூலம் கோலி ரோஜர் பெடரர் மற்றும் செர்ஜியோ ராமோஸ் போன்ற உலகின் முன்னணி விளையாட்டு வீரர்களை விட பல மடங்கு பின்தொடர்பவர்களை கொண்ட இந்திய வீரராக இருக்கிறார். கிரிக்கெட் வீரர் என்பதைத் தவிர, இந்திய விளம்பரச் சந்தையில் கோலி மிகவும் பிடித்த முகமாகவும் மாறியுள்ளார். தற்போது, அவர் 1050 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஒரு படி மேலே சென்று, உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.
பெங்களூரைச் சேர்ந்த வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனமான ஸ்டாக்குரோ (StockGro) படி, கோலி 'உலகின் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களில்' ஒருவர். ஃபோர்ப்ஸ், டிஎன்ஏ, எம்பிஎல் மற்றும் ஸ்டார்ட்அப்டால்கி போன்றவற்றை மேற்கோள் காட்டி, கிரிக்கெட், சமூக ஊடக வருவாய்கள், தனிப்பட்ட சொத்துக்கள் மற்றும் பிற வணிக முயற்சிகளில் இருந்து அவரது வருமானத்தை நிறுவனம் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.
கோலியின் வருமானம்
7 கோடி மதிப்பிலான வருடாந்திர ஒப்பந்தத்தின் ‘ஏ+’ பிரிவில் விராட் கோலியை பிசிசிஐ சேர்த்துள்ளது. அவர் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு தலா ரூ.6 லட்சமும், ஒரு டி20 போட்டியில் இருந்து ரூ.3 லட்சமும் சம்பாதிக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து அவர் சம்பாதித்ததைத் தவிர, அவர் இந்தியன் சூப்பர் லீக் கிளப் எஃப்சி கோவா, ஒரு டென்னிஸ் அணி மற்றும் மல்யுத்த சார்பு அணி ஆகியவற்றின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.
கோலி இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் முக்கிய முகமாகவும் இருந்து வருகிறார். அங்கு அவர் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
களத்திற்கு வெளியே, கோலி பல பிராண்டுகள் மற்றும் உணவகங்களை வைத்திருக்கிறார். மேலும் ப்ளூ ட்ரைப், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ், எம்.பி.எல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கான்வோ போன்ற பல ஸ்டார்ட்-அப்களிலும் முதலீடு செய்துள்ளார். விளம்பரங்களைப் பற்றி பேசுகையில், அவர் ஒரு விளம்பரப் படத்தில் நடிக்க ரூ 7.5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை (பாலிவுட் மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள எந்தப் பிரபலமும் இல்லாததாகக் கூறப்படுகிறது) வாங்குகிறார். மற்றும் 18க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் முகமாகவும் அவர் இருக்கிறார். இதன் மூலம் அவருக்கு மொத்தமாக 175 கோடி ரூபாய் கிடைக்கிறது.
கோலி சமூக ஊடகங்களில் மிகவும் விரும்பப்படும் மற்றும் பின்தொடரும் ஒருவராக இருப்பதால், அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ஒரு பதிவுக்கு முறையே ரூ. 8.9 கோடி மற்றும் ரூ.2.5 கோடி வசூலிக்கிறார். அவரது தனிப்பட்ட சொத்துகளைப் பொறுத்தவரை, அவருக்கு மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள வீடும், குர்கானில் ரூ.80 கோடி மதிப்புள்ள மற்றொரு வீடும் உள்ளது. மேலும் அவரது கேரேஜில் பல சொகுசு கார்கள் உள்ளன.
The VIRAT empire of Kohli ! As one of the world's highest-earning athletes, he commands a staggering net worth of ~₹1050 crores! 💸
Check out this multi-dimensional superstar's investments! 🤩
Who should we cover next⁉️🚀
Source - Forbes, DNA, MPL, Startuptalky etc pic.twitter.com/8mOcET6pfv— StockGro (@stockgro) May 29, 2023
முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1040 கோடிகள் ஆகும். ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு ரூ.1,250 கோடி ஆகும். தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 214 கோடி என்பது குறிப்பித்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.