scorecardresearch

“பஹுத் தம் ஹை” – எதிரணியின் நிம்மதியை குலைக்கும் ஷஃபாலி வெர்மா பற்றி ஷேவாக்

உலகக் கோப்பைத் தொடரில் அனைத்து போட்டிகளிலும் அதிரடியில் எதிரணிகளை மிரட்டி வரும் ஷஃபாலி வெர்மாவை லேடி ஷேவாக் என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்

Virender Sehwag about Shafali Verma batting
Virender Sehwag about Shafali Verma batting

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் போட்டியில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியிலும், இலங்கை அணியை ஊதித்தள்ளி இந்தியா வென்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை: 16 வயது சரவெடியை உலகம் அடையாளப்படுத்தும் பதம் ‘லேடி ஷேவாக்’!

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்தது. 114 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் அசத்தலாக பேட்டிங் செய்த ஷஃபாலி வெர்மா 34 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 2-வது முறையாக அரை சதத்தை தவறவிட்டார். இந்திய அணி கடந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கு ஷபாலி வர்மாவின் பேட்டிங் முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்ளிட்ட 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ

இந்தப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் ராதா யாதவ் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கே ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் அனைத்து போட்டிகளிலும் அதிரடியில் எதிரணிகளை மிரட்டி வரும் ஷஃபாலி வெர்மாவை லேடி ஷேவாக் என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேவாக், ” எங்கள் வீராங்கனைகள் அதிக வலிமை உடையவர்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.


தவிர, ஷஃபாலி வெர்மாவுக்கு தனது வாழ்த்துகளையும் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Virender sehwag about shafali verma batting ind vs sl

Best of Express