Advertisment

கிரிக்கெட் அணி பெயரை மாற்ற பி.சி.சி.ஐ-க்கு கோரிக்கை... எரியும் 'பாரத்' சர்ச்சையில் எண்ணெய் ஊற்றும் சேவாக்!

உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி பெயரை இந்தியா என்பதற்குப் பதிலாக 'பாரத்' என்ற ஜெர்சியை அணிய வேண்டும் என்று பி.சி.சி.ஐ-யிடம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Virender Sehwag

சேவாக்கின் பதிவுக்கு ரசிகர் ஒருவர், 'நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்' கமெண்ட் செய்துள்ளார்.

Sports, cricket  - Virender Sehwag Tamil News: ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு 'பாரத்' குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வருகிற 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில்,  நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இந்நிலையில், இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி பெயரை இந்தியா என்பதற்குப் பதிலாக 'பாரத்' என்ற ஜெர்சியை அணிய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வலியுறுத்தியுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்க:- Virender Sehwag urges BCCI to have ‘Bharat’ instead of ‘India’ on Indian jerseys at ICC World Cup

இதுதொடர்பாக சேவாக் தனது X தளத்தில், "ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாம் பாரதியர்கள், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பெயர். நமது உண்மை பெயரை ‘பாரத்’ அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற நீண்ட காலமாகிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் தங்களின் மார்பில் பாரத் இருப்பதை உறுதி செய்ய பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷாவை நான் கேட்டுக்கொள்கிறேன். 

1996 உலகக் கோப்பையில், நெதர்லாந்து ஹாலந்து என்ற பெயரில் பாரத் உலகக் கோப்பையில் விளையாட வந்தது. 2003 ஆம் ஆண்டில், நாங்கள் அவர்களைச் சந்தித்தபோது, ​​அவர்கள் நெதர்லாந்தாக இருந்தனர். தொடர்ந்து அப்படித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை பர்மா மீண்டும் மியான்மர் என மாற்றியது. மேலும் பல நாடுகள் தங்களது உண்மை பெயருக்கு திரும்பிவிட்டனர் ”என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு ஒரு ரசிகர், 'நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்' கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த சேவாக், தனது கருத்து அரசியல் சார்பின் அடிப்படையில் இல்லை என்றும், கடந்த இரண்டு தேர்தல்களில் இரண்டு 'முக்கிய' அரசியல் கட்சிகள் தன்னை வரவேற்றதை தான் நிராகரித்ததாகவும் குறிப்பிட்டார்.

“எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. கடந்த இரண்டு தேர்தல்களிலும் இரு பிரதான கட்சிகளும் அணுகியுள்ளன. பெரும்பாலான சினிமா பிரபலங்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் அரசியலில் நுழையக்கூடாது என்பதே எனது கருத்து. பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஈகோ மற்றும் அதிகாரத்திற்கான பசி மற்றும் மக்களுக்கு உண்மையான நேரத்தை ஒதுக்குவதில்லை. அதில் சிலர் விதிவிலக்குகள். ஆனால் பொதுவாக பெரும்பாலானவர்கள் மக்கள் தொடர்பு (PR) வேலையை மட்டுமே செய்கிறார்கள். நான் கிரிக்கெட்டில் ஈடுபடுவதையும், கருத்து தெரிவிப்பதையும் தான் விரும்புகிறேன். பகுதி நேர எம்.பி.யாக இருப்பதையும் நான் எப்போதும் விரும்புவதில்லை, ”என்று சேவாக் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Cricket Virender Sehwag Sport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment