Advertisment

IND VS PAK: 'இந்தியாவுக்கு தான் வாய்ப்பு அதிகம், நம்ம ரெக்கார்ட் அப்படி' - இப்பவே ஆரம்பிக்கும் சேவாக்

பாகிஸ்தான் 50 ஓவர் ஃபார்மெட்டில் 7-0 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளனர், ஆட்டத்தை வெல்ல வேண்டிய அழுத்தத்திலும் உள்ளனர் என்று சேவாக் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Virender Sehwag take on Ind vs Pak encounters Tamil News

மும்பை: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 போட்டி அட்டவணையின் அறிவிப்பின் போது முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். (புகைப்படம் உதவி: பி.டி.ஐ)

Virender Sehwag Tamil News: ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இன்று வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

Advertisment

இந்நிலையில், இந்தியாவின் பரம போட்டியாளர்களான பாகிஸ்தான் 50 ஓவர் ஃ பார்மெட்டில் 7-0 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளனர் என்றும், ஆட்டத்தை வெல்ல வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர் என்றும் முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

publive-image

இது தொடர்பாக ஐசிசி உலகக் கோப்பையின் அட்டவணை அறிவிப்பின் போது பேசிய வீரேந்திர சேவாக், “எல்லோருக்கும் தெரியும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் கவனம் செலுத்தப் போகிறது. அந்த ஆட்டத்தின் போது, சமூக ஊடகங்களில் சோயப் அக்தருடன் சண்டையிட நான் தயாராக இருக்கிறேன். உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடையவில்லை என்று அந்த சாதனை கூறுகிறது.

நாம் 7-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளோம், அதில் ஒரு முறை மட்டுமே சேஸ் செய்துள்ளோம். மற்றபடி, ஒவ்வொரு முறையும் இந்தியா முதலில் பேட்டிங் செய்து மேட்ச் வின்னிங் ஸ்கோரை குவித்துள்ளது. அன்று (அக்டோபர் 15) என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அழுத்தத்தைக் கையாளும் அணியே வெற்றி பெறும்.

publive-image

இப்போது இந்தியா அழுத்தத்தைக் கையாளுகிறது என்று நான் உணர்கிறேன், அதனால்தான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அதேசமயம் இந்தியாவுக்கு எதிராக அவர்கள் வெல்லாத சுமை பாகிஸ்தானுக்கு உள்ளது. 1990 களில், அவர்கள் அழுத்தத்தை சமாளிப்பதில் நன்றாக இருந்தனர். ஆனால் 2000-க்குப் பிறகு, இந்தியா அதை நன்றாக செய்து வருகிறது.

எந்த வீரரும் தாங்கள் அழுத்தத்தை உணரவில்லை என்று சொன்னால், அது சரியென்று நான் நினைக்கவில்லை. நாங்களும் அதைச் சொன்னோம். ஆனால் முடிவில், இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாட்டு என்று எங்களுக்குத் தெரியும். மேலும் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும், ”என்று அவர் மேலும் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Virender Sehwag India Vs Pakistan Ahmedabad Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment