Advertisment

400 கோடி லாபம் பாக்குறீங்க... லக்னோ ஓனர் மீது சேவாக் பாய்ச்சல்!

கேப்டன் கே.எல். ராகுலை பொது இடத்தில் வைத்து அவமரியாதை படுத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார் வீரேந்திர சேவாக்.

author-image
WebDesk
New Update
Virender Sehwag Take On KL Rahul Sanjiv Goenka Unfiltered chat Tamil News

அணியின் உரிமையாளர்கள் ஆடுகளத்தில் இருக்கும் வீரர்கள் அல்லது பேக்ரூம் ஊழியர்களிடம் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் வலியுறுத்தியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Virender Sehwag | Kl Rahul | Lucknow Super Giants | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த புதன்கிழமை ஐதராபாத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ அணி மோசமான தோல்வியைப் பெற்றது. 

Advertisment

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய ஐதராபாத் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 9.4 ஓவரிலே எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

லக்னோ அணியின் இந்த மோசமான தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுலிடம் களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தி கொந்தளித்து பேசியிருந்தார் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகியது. இந்த சம்பவம் லக்னோ அணி வீரர்கள் மத்தியில் அமைதியின்மையையும், ஒரு வித குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த நிலையில், கேப்டன் கே.எல். ராகுலை பொது இடத்தில் வைத்து அவமரியாதை படுத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக். மேலும் அவர், அணியின் உரிமையாளர்கள் ஆடுகளத்தில் இருக்கும் வீரர்கள் அல்லது பேக்ரூம் ஊழியர்களிடம் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

கிரிக்பஸ் இனைய பக்கத்திற்கு வீரேந்திர சேவாக் அளித்துள்ள பேட்டியில், "அணியின் உரிமையாளர், டிரஸ்ஸிங் ரூமில் அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வீரர்களை சந்திக்கும் போது, ​​அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மட்டுமே பேச வேண்டும். அதற்கு மாறாக, 'என்ன நடக்கிறது? என்ன பிரச்சினை?' அல்லது டீம் மேனேஜ்மென்ட் ஊழியர்களில் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட வீரரைப் பற்றி உரிமையாளர்கள் வந்து கேள்வி எழுப்புகிறார். 

அவர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன் அணியை நடத்துவதைப் பார்க்க வேண்டும். எனவே இந்த உரிமையாளர்கள் வீரர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது அல்லது என் மீது கோபப்படாமல் இருப்பது நல்லது.  

இவர்கள் அனைவரும் பிசினஸ்மேன்கள். லாப நஷ்டத்தை மட்டுமே புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இங்கே, ஒரு நஷ்டமும் இல்லை, அதனால் அவர்களுக்கு என்ன தொந்தரவு? இருக்கிறது. 400 கோடி வரை லாபம் ஈட்டுகிறீர்கள். அதாவது, நீங்கள் ஒன்றுமே செய்யமால் இந்த தொழில் லாபம் ஈட்டுகிறீர்கள். அதைக் கவனித்துக் கொள்ள உங்களிடம் ஆட்கள் உள்ளனர், என்ன நடந்தாலும், நீங்கள் லாபம் சம்பாதிக்கிறீர்கள். 

எனவே, உங்களது பணி வீரர்களை ஊக்குவிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். ஐ.பி.எல்-லில் இன்னும் வேறு அணிகள் உள்ளன என்றும், இந்த அணியை விட்டு வெளியேறினால், அவர்களில் யாராவது தன்னை அழைத்துக் கொள்வார்கள் என அந்த வீரர் நினைத்தால் என்ன நடக்கும். அப்படி, நீங்கள் ஒரு வீரரை இழந்தால், உங்களது வெற்றிக்கான வாய்ப்பு பூஜ்ஜியமாகும். நான் பஞ்சாபை விட்டு வெளியேறியபோது, ​​அவர்கள் 5-வது இடத்தில் இருந்தனர். இன்று வரை அவர்கள் வேறு எந்த சீசனிலும் ஐந்தாவது இடத்திற்கு வரவில்லை." என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Virender Sehwag Lucknow Super Giants Kl Rahul IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment