Virender Sehwag : பள்ளியின் பாடப் புத்தகத்தில் குடும்பம் குறித்து கூறப்பட்டிருக்கும் விஷயத்தை கண்டு கோவமடைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கியெழுந்துள்ளார்.
Virender Sehwag : குடும்பம் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டதற்கு கோவமடைந்த சேவாக்:
இந்திய முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சமூக வலைத்தளங்களில் அதிகமாக கவனம் செலுத்துவதை அனைவராலும் தெரிந்துக்கொள்ள முடியும். தனது டுவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் மட்டுமின்றி, நகைச்சுவை வீடியோக்கள், சக நண்பர்களை பற்றி மற்றும் சமூக நலம் குறித்த பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார்.
Virender Sehwag
இந்நிலையில், குழந்தைகள் படிக்கும் பள்ளிப் பாடப் புத்தகத்தில் குடும்பம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டதை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
August 2018
அதில், “ சிறிய குடும்பத்தில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருப்பார்கள். சிறிய குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழலாம்.... பெரியக் குடும்பத்தில், பெற்றோர், தாத்தா, பாட்டி மற்றும் குழந்தைகள் என அனைவரும் இருப்பார்கள். பெரியக் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தை பதிவிட்டு, குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் இப்படி ஒரு தவறான விஷயங்கள் உள்ளன. இதை மறுமதிப்பீடு செய்யும் அதிகாரிகள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை என கோவத்தில் கொதித்தெழுந்துள்ளார் சேவாக்.