நோ ஷேவாக்… ஒய் ஜடேஜா? – இது வாசிம் ஜாஃபரின் ‘ஆல் டைம்’ இந்திய அணி XI பஞ்சாயத்து

வீட்டில் பொழுது போகவில்லை எனில், சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களை கொண்டு பெஸ்ட் பிளேயிங் லெவனை அறிவிப்பார்கள். இதில், தங்களுக்கு பிடித்த வீரர்கள் இடம் பெறவில்லை எனில், ரசிகர்கள் கம்பு சுற்றுவதுவழக்கம். அப்படி ஒரு கம்பு சுற்றல், இப்போது சமூக தளங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.…

By: Published: June 10, 2020, 4:27:54 PM

வீட்டில் பொழுது போகவில்லை எனில், சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களை கொண்டு பெஸ்ட் பிளேயிங் லெவனை அறிவிப்பார்கள். இதில், தங்களுக்கு பிடித்த வீரர்கள் இடம் பெறவில்லை எனில், ரசிகர்கள் கம்பு சுற்றுவதுவழக்கம்.

அப்படி ஒரு கம்பு சுற்றல், இப்போது சமூக தளங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் அறிவித்திருக்கும் அவரது ஆல் டைம் பெஸ்ட் இந்திய ஒருநாள் அணி பட்டியல் தான்.

முதலில் லிஸ்ட்டை பார்த்துவிடுவோம்,

All time India ODI XI

சச்சின் டெண்டுல்கர்,

சவுரவ் கங்குலி

ரோஹித் ஷர்மா,

விராட் கோலி,

யுவராஜ் சிங்,

தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்)

கபில் தேவ் 

ரவீந்திர ஜடேஜா (அ) ஹர்பஜன் சிங்,

அனில் கும்ப்ளே,

ஜாஹீர் கான்,

ஜஸ்ப்ரித் பும்ரா


அவ்வளவு தான்… லிஸ்ட்டை பார்த்தவுடன் ‘எங்கயா ஷேவாக்கை காணோம்?’ என்று பொங்கியெழுந்துவிட்டனர். அப்படி பொங்கியதில் முக்கிய ரசிகர் ஒருவர் ஹர்பஜன் சிங். வாசிமின் லிஸ்ட்டுக்கு ரிப்ளை செய்த ஹர்பஜன், ‘ஷேவாக் இல்லையே???’ என்று கூற, யாரை நீக்கிவிட்டு ஷேவாக்கை உள்ளே கொண்டு வருவீர்கள்? என்று வாசிம் பதில் கேள்வி எழுப்ப, ‘ஆயிரம் இருந்தாலும், எப்படி எங்க ஸ்மேஷ்ரை விட்டுட்டு லிஸ்ட் தயாரிச்ச??’ என்ற ரீதியில் அவரது ரசிகர்கள், கமெண்ட்டுகளை தெளித்து வருகின்றனர்.

அதே சமயம், 8வது வீரராக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்பஜன் ஆகிய இருவருக்கு இடத்தை பகிர்ந்து அளித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் அணியில், இன்று நிரந்தர வீரராகவோ, மேட்ச் வின்னராகவோ அணியில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வரும் ஜடேஜாவுக்கு ஏன் அவர் வாய்ப்பளித்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, பெஸ்ட் ஆல் டைம் ஒருநாள் அணியையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த வீரர்கள் கொண்ட அணியாம். அதில்,

சச்சின் டெண்டுல்கர்,

ரோஹித் ஷர்மா,

விவியன் ரிச்சர்ட்ஸ்,

விராட் கோலி,

ஏபி டி வில்லியர்ஸ்,

பென் ஸ்டோக்ஸ்,

மகேந்திர சிங் தோனி (c/wk)

வாசிம் அக்ரம்,

ஷேன் வார்னே (அ) சக்லைன் முஷ்டக் 

ஜோயல் கார்னர்,

கிளென் மெக்ரத்,

ரிக்கி பாண்டிங் (12வது வீரர்)

அது சரி… பாண்டிங்குக்கே வாய்ப்பில்லையா!! அப்படி போடு அருவாள!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Virender sehwags exclusion wasim jaffers all time india odi xi cricket news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X