Virender Sehwag – Lionel Messi Tamil News: 22வது கால்பந்து உலகக் கோப்பை திருவிழா கத்தாரில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனா – பிரான்ஸ் அணிகள் மல்லுக்கட்டிய நிலையில், பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டீனா வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் 1978, 1986-க்குப் பிறகு அர்ஜென்டீனா 3-வது முறையாக உலகக் கோப்பை முத்தமிட்டது.
அதேவேளையில், அர்ஜென்டீனா அணியின் கேப்டன் மெஸ்ஸி உலகக் கோப்பையை முதல் முறையை தனது கையில் ஏந்தி முத்தமிட்டார். இதை உலகம் முழுதும் உள்ள ரசிகர்கள் தெருக்களிலும் வீதிகளிலும் இறங்கி வெடி வெடித்து கொண்டாடினர். மேலும், அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்தனர். அவை இணைய பக்கங்களில் இன்றும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்திர சேவாக் தனது சமூக வலைதளத்தில் மெஸ்ஸி குறித்த மீம்ஸ் ஒன்றை பகிர்ந்தார். அதில், ‘அர்ஜென்டினாவுக்காக கோப்பையை வென்ற கொடுத்த மெஸ்ஸி மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால், அந்த வெற்றிக்குப் பிறகு இந்திய காவலராக நியமிக்கப்பட்டிருப்பார்’ என்று குறிப்பிடுவது போல் இருந்தது. சேவாக்கின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வரும் நிலையில், சிலர் ‘மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால் வாய்ப்பு கிடைத்திருக்காது’ என்றும் கூறியுள்ளனர்.

நடப்பு கால்பந்து உலகக் கோப்பைக்குப் பிறகு அர்ஜென்டீனா அணிக்காக விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்த நிலையில், அவர் தற்போது தொடர்ந்து அர்ஜென்டீனா அணியில் விளையாடவுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil