/tamil-ie/media/media_files/uploads/2018/03/download.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக கேஷூவலாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதில், விராட் கோலி வெள்ளை நிற டி ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்துள்ளார். அனுஷ்கா ஷர்மா கருப்பு நிற உடையை அணிந்திருக்கிறார்.
@imVkohli & @AnushkaSharma clicked at airport #Virushka#Viratkohli#ViratKohliManiapic.twitter.com/zXGxqxWAMw
— Virat Kohli Mania (@viratkohlimania) 4 March 2018
Anushka Sharma and Virat Kohli ???????? #vk18 #viratkohli #anushkasharma #viratianforeverclub
A post shared by VirAtiAn ForEvEr (@viratian_forever_club) on
அனுஷ்கா ஷர்மா நடித்த பரி திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது. திகில் திரைப்படமான இதில் அனுஷ்கா ஷர்மாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே இத்திரைப்படத்தில் தனது மனைவியின் நடிப்புக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் விராட் கோலி.
அப்போது, ”பரி திரைப்படத்தை பார்த்தேன். என் மனைவியின் மிகச்சிறந்த நடிப்பு இத்திரைப்படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. வெகு காலம் கழித்து நான் பார்த்த சிறந்த திரைப்படம். கொஞ்சம் பயந்தேன். உனக்காக பெருமைப்படுகிறேன் அனுஷ்கா”, என விராட் கோலி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.