Advertisment

பார்வை மாற்றுத்திறனாளி பெண்களுக்கு கிரிக்கெட் போட்டி: தமிழ்நாடு- கேரளா அணிகள் மோதல்

இப்போட்டியில் வெற்றி பெற்ற கேரள அணிக்கு ரொக்கப் பரிசாக ரூ.25 ஆயிரமும், தமிழ்நாடு அணிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
PBCCL.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கண் பார்வையற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி கோவை துடியலூரில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணியுடன் கேரளா அணி மோதியது.  டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

Advertisment

முதலில் பேட்டிங் செய்த கேரளா அணியினர் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தனர். இந்த அணி சார்பாக விளையாடிய ஜான்ஷீலா அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி சார்பாக பந்து வீசிய அம்மு 1 விக்கெட்டை வீழ்த்தினார். 

PBCCL1.jpg

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.  சி.பி.இ பிட்ச் பர்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பாக நடந்த இப்போட்டியில் வெற்றி பெற்ற கேரள அணிக்கு ரொக்கப் பரிசாக ரூ.25 ஆயிரமும், தமிழ்நாடு அணிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது.

செய்தி: பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

cricket news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment