வீடு முழுக்க வெளிநாட்டு செஸ் போர்டு... அலமாரி புல்லாம் கோப்பைகள்: விஸ்வநாதன் ஆனந்த் ஹோம் டூர் - வீடியோ!

வீடியோவின் மற்றொரு பகுதியில் விஸ்வநாதன் தான், சிறு வயது முதல் வென்ற கோப்பைகள் பதக்கங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்குகிறார். கோப்பைகளில் பொறிக்கப்பட்டு இருக்கும் எழுத்துக்கள் குறித்தும் அவர் கூறுகிறார்.

வீடியோவின் மற்றொரு பகுதியில் விஸ்வநாதன் தான், சிறு வயது முதல் வென்ற கோப்பைகள் பதக்கங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்குகிறார். கோப்பைகளில் பொறிக்கப்பட்டு இருக்கும் எழுத்துக்கள் குறித்தும் அவர் கூறுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viswanathan Anand Chess Grandmaster Chennai Home tour Tamil News

செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வசிக்கும் வீடு எப்படியிருக்கும், அவரது வீட்டில் என்னவெல்லாம் இருக்கும் என்பதை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளது மாஸ்ஹேபிள் இந்தியா யூடியூப் சேனல்.

செஸ் உலகில் ஜாம்பவான் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். ‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் இவர், தனது 16 வயதிலேயே, அதிவேகமாக சதுரங்கக் காய்களை நகர்த்தி “மின்னல் சிறுவன்” என்கிற பட்டத்தைப் பெற்றவர். 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்ற இவர்,  “உலகின் அதிவேக சதுரங்க வீரர்” என்ற சிறப்பு பட்டத்தையும் வென்றெடுத்தார்.

Advertisment

தனது 14-வது வயதில், ‘இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்’, 15 வயதில் ‘அனைத்துலக மாஸ்டர்' அந்தஸ்து, 18 வயதில் ‘உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம்’, ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ என வென்று சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவராக இருக்கிறார். அவருக்கு இந்திய அரசு அதன் உயரிய விருதுகளான ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ எனப் பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் ‘புக் ஆஃப் தி இயர்’, ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான ‘சதுரங்க ஆஸ்கார் விருதுகள்’ என மேலும் பல விருதுகளை விஸ்வநாதன் ஆனந்த் வென்றுள்ளார். இப்படியாக உலக செஸ் அரங்கில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் விஸ்வநாதன் ஆனந்த் மிகவும் மென்மையான மனிதராக அறியப்படுகிறார். 

பொதுவெளியில் உரையாடும் போதும், நேர்காணல் அளிக்கும் போதும் எளிமையாக பதில் அளிக்கக் கூடியவராகவும் இருக்கிறார். செஸ் களத்தில் இருப்பது போல் அமைதியான முக பாவணையை பெற்றவராகவும் இருக்கிறார். இளம் தலைமுறை வீரர்கள் அவரிடம் இருந்து செஸ் எப்படி ஆடுவதுடன், பண்பையும் நல்ல பழக்க வழக்கங்களை அவர்களாகவே கற்றுக் கொள்ள முன் மாதிரியாகவும் இருக்கிறார். 

Advertisment
Advertisements

ஹோம் டூர் 

அப்படிப்பட்ட செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வசிக்கும் வீடு எப்படியிருக்கும், அவரது வீட்டில் என்னவெல்லாம் இருக்கும் என்பதை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளது மாஸ்ஹேபிள் இந்தியா யூடியூப் சேனல். அந்த வீடியோவில்,  விஸ்வநாதன் ஆனந்த்தின் சென்னை வீடு காட்டப்படுகிறது. அவரும் அவரது மனைவி அருணாவும் வரவேற்கிறார்கள். 

இருவரும் தங்களது வீட்டை சுற்றிக் காட்டுகிறார்கள். வீடு முழுக்க செஸ் பெட்டகங்கள் இருக்கின்றன. அதில் வெளிநாட்டில் தாங்கள் வாங்கிய மற்றும் விஸ்வநாதன் ஆனந்த்திற்கு பரிசளிக்கப்பட்ட செஸ் போர்டு உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. அவை எப்படி அவர்களது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது என்பதைப் பற்றி அருணா விளக்குகிறார். தங்களது மகன் ஆனந்த் அகில் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார். 

வீடியோவின் மற்றொரு பகுதியில் விஸ்வநாதன் தான், சிறு வயது முதல் வென்ற கோப்பைகள் பதக்கங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்குகிறார்.  கோப்பைகளில் பொறிக்கப்பட்டு இருக்கும் எழுத்துக்கள் குறித்தும் அவர் கூறுகிறார். 1987 ஆம் ஆண்டு  மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராமசாமி வெங்கடராமன் கையில் இருந்து பத்ம ஸ்ரீ விருது வென்ற புகைப்படத்தை அவர் காட்டுகிறார். அவர் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தாள் வெளியிட்ட செய்தி குறித்த 'பேப்பர் கட்' வைத்துள்ளார். இன்னும் தான் பொக்கிஷமாக வைத்துள்ள பல பொருள்களையும் அவர் காண்பித்து மகிழ்கிறார். 

வீடியோ தொடர்பான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

Viswanathan Anand Chennai Chess

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: