புரோ கபடி 2021: தமிழ் தலைவாஸில் களமிறங்கும் 7 புது முகங்கள்!

pro kabaddi league 2021 auction Tamil News: புரோ கபடி லீக்கின் 8வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் அதிரடி காட்டிய தமிழ் தலைவாஸ் அணி 7 புது முக வீரர்களை வாங்கியுள்ளது.

vivo Pro Kabaddi League 2021 Tamil News: tami Thalaivas auctioned 7 new player

Tamil Thalaivas latest Tamil News: இந்தியாவில் நிலவிய கொரோனா தொற்று பரவலால் புரோ கபடி லீக் (பி.கே.எல்) போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. தற்போது தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இந்தாண்டு இறுதியில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12 அணிகள் பங்கேற்கவுள்ள புரோ கபடி லீக்கின் 8வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று மும்பயில் நடந்தது. வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கான நேற்றே கடைசி நாள் என்பதால் ஏலம் சற்று பரபரப்பாகவே காணப்பட்டது. ஏலத்தில் பங்கேற்ற அணிகள் அனைத்தும் அணிகளும் தங்களுக்கான வீரர்களை ஆவர்வமாக வாங்கிக் குவித்தன. இதில், துவக்க நேரத்தில் அமைத்த காத்த தமிழ் தலைவாஸ் அணி 7 புதிய வீரர்களை வாங்கி அதிரடி காட்டியது. இதில் பி பிரிவு ரைடர் எம்எஸ் அதுலை ரூ .30 லட்சத்திற்கு வாங்கியது.

கேரளாவைச் சேர்ந்த அதுல், ஏலப் பட்டியலில் பி பிரிவு ரைடர் உள்ளார். இவர் முன்பு லீக்கின் ஆறாவது பதிப்பில் தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்று இருந்தார்.

இந்த ஏலத்தில் சி பிரிவு ரைடர் அஜிங்க்யா பவார் ரூ .19.5 லட்சத்திற்கும், சி பிரிவு ஆல்-ரவுண்டர் சவுரப் பாட்டீல் ரூ .15 லட்சத்திற்கும் தமிழ் தலைவாஸ் அணியால் வாங்கப்பட்டனர். தவிர, அந்த அணி மேலும் நான்கு வீரர்களை 10 லட்சம் கொடுத்து வாங்கியது. சந்தபனசெல்வம் ( சி பிரிவு ஆல்-ரவுண்டர்), சாகர் கிருஷ்ணா (சி பிரிவு ஆல்-ரவுண்டர்), சாஹில் (சி பிரிவு டிபெண்டர்), மற்றும் பவானி ராஜ்புத் (சி பிரிவு ரைடர்) போன்றோர் ஆவார்.

தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே ரூ. 2.38 கோடி செலவில் 3 இளம் வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது. அவர்களில் மன்ஜீத் மற்றும் பிரபஞ்சன் முறையே ரூ .92 லட்சம் மற்றும் ரூ .71 லட்சங்களுக்கு வாங்கப்பட்டனர். அதே நேரத்தில் சுர்ஜீத்தை ரூ .75 லட்சத்திற்கு வாங்கினர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vivo pro kabaddi league 2021 tamil news tami thalaivas auctioned 7 new player

Next Story
டோக்கியோ பாராலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்Mariyappan Thangavelu wins Silver medal, Tokyo Paralympics, Mariyappan wins silver, tamil nadu athlets Mariyappan wins silver, டோக்கியோ பாராலிம்பிக், வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன், மாரியப்பன் தங்கவேலு, வெள்ளிப் பதக்கம், ஷரத் குமார் வெண்கலம் வென்றார், Mariyappan wins silver medal, sharad kumar wins bronze
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express