Advertisment

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் டிராவிட்: இடைக்கால பயிற்சியாளரை அறிவித்த பிசிசிஐ!

NCA chief VVS Laxman has been appointed as the interim head coach of the Indian cricket team for the upcoming ACC Asia Cup 2022 Tamil News: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் .லக்‌ஷ்மணன் செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
VVS Laxman appointed India’s interim head coach for Asia Cup 2022

Laxman will replace Rahul Dravid who is down with Covid. (Express file photo)

VVS Laxman Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.

Advertisment

20 ஓவர்களாக நடத்தப்படும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. ஒருநாடு மட்டும் தகுதி சுற்றில் இருந்து நுழையும். ஆசிய கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஓமனில் உள்ள மஸ்கட்டில் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இன்றுடன் தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைகிறது.

இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆசிய கோப்பை டி20 தொடரில் பங்கேற்க துபாய் சென்ற இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்லவில்லை .

இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் .லக்‌ஷ்மணன் செயல்படுவார் என்றும், கொரோனா சோதனை நெகட்டிவ் என வந்தவுடன் டிராவிட் அணியில் சேருவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

“ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ஏசிசி ஆசிய கோப்பைக்கான இந்திய அணிக்கு (சீனியர் ஆண்கள்) இடைக்கால தலைமை பயிற்சியாளராக என்சிஏவின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன் இருப்பார்.

ஜிம்பாப்வேயில் ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணியுடன் பயணித்த லக்ஷ்மன், அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு புறப்படுவதற்கு முன்பு கோவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்த ராகுல் டிராவிட் இல்லாத நிலையில் அணியின் தயாரிப்பை மேற்பார்வையிடுவார். டிராவிட் எதிர்மறையாக சோதனை செய்து பிசிசிஐ மருத்துவக் குழுவால் அனுமதிக்கப்பட்டவுடன் அணியில் இணைவார்” என்று பிசிசிஐ அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Cricket Sports Tamil Cricket Update Asian Games India Vs Pakistan Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment