/indian-express-tamil/media/media_files/KYC30cWbhdQA5PRSD6Ee.jpg)
சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணி நடப்பு சாம்பியனாக வலம் வருகிறது. தமிழ்நாடு அணி மூன்று முறை கோப்பையை வென்று மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது.
Syed-mushtaq-ali-trophy | washington-sundar | tamilnadu-cricket-team:சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் வருகிற16ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உளள்து. இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அணியை கேப்டனாக ஆல்ரவுண்டர் வீரர் வாஷிங்டன் சுந்தர் வழிநடத்துகிறார். அவருடன் சாய் சுதர்ஷன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அணியில் விஜய் சங்கர், என்.ஜெகதீசன், பி.அபராஜித், ஷாருக் கான், டி.நடராஜான், சந்தீப் வாரியர், ஆர்.சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி, பாரம்பரிய எதிரியான கர்நாடகாவை எதிர்கொள்கிறது.
சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணி நடப்பு சாம்பியனாக வலம் வருகிறது. தமிழ்நாடு அணி மூன்று முறை கோப்பையை வென்று மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது. 2006-07 முதல் சீசனில் தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழ்நாடு அணி கோப்பையை வென்றது. இதன்பிறகு, 2020 - 21 சீசனிலும், 2021 - 22 சீசனிலும் தொடர்ச்சியாக வென்றது. 2022 - 23 தொடரில் மும்பை வென்றது.
தமிழ்நாடு அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
எம்.எஸ் வாஷிங்டன் சுந்தர் (கேப்டன்), பி சாய் சுதர்சன் (வதுணை கேப்டன்), என் ஜெகதீசன், விஜய் சங்கர், சி ஹரி நிஷாந்த், எம் ஷாருக் கான், ஜி அஜிதேஷ், பி அபராஜித், ஆர் சஞ்சய் யாதவ், எம் முகமது, ஆர் சாய் கிஷோர், சிவி வருண், டி நடராஜன், குல்தீப் ராம்பால் சென் மற்றும் சந்தீப் வாரியர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.