Washington Sundar Tamil News: இங்கிலாந்து கவுண்டி அணியான லங்காஷயர் அணியில் இந்திய ஆல்-ரவுண்டர் வீரர் வாஷிங்டன் சுந்தர் கடந்த தினங்களுக்கு முன்னர் இணைந்தார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “லங்காஷயர் அணியில் நான் சேர இருப்பதன் காத்திருப்பை என்னால் தாங்க முடியாவில்லை. மான்செஸ்டருக்கு செல்வதில் மகிழ்ச்சி.” என்று பதிவிட்டு இருந்தார்.
I can't wait to join up with @lancscricket! Excited to get to Manchester and thanks to @emirates for the comfortable flight! pic.twitter.com/NVm9SRJ5jy
— Washington Sundar (@Sundarwashi5) July 16, 2022
இந்நிலையில், வாஷிங்டன் சுந்தர் நேற்று முதல் தொடங்கிய நார்தம்ப்டன்ஷயர் – லங்காஷயர் அணிகளுக்கு இடையேயான கவுண்டி சாம்பியன்ஷிப்பில் ஆட்டத்தில் அறிமுகமானார். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நார்தம்ப்டன்ஷயர் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ராப் கியோக் 54 ரன்கள் எடுத்தார். லூயிஸ் மக்மனஸ் 56 ரன்களுடனும், சைமன் கெரிகன் பூஜ்ஜிய ரன்னுடனும் தற்போது களத்தில் உள்ளனர்.
கவுண்டி ஆட்டத்தில் விக்கெட்டுகளை சாய்த்த இந்திய ஆல்ரவுண்டர்…
இந்த ஆட்டத்தில், லங்காஷயர் அணியின் அறிமுக வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரின் அறிமுக கவுண்டி ஆட்டத்தில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த நிலையில், நார்தம்ப்டன்ஷயர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வில் யங்கை முதல் நாளின் ஆரம்பத்திலேயே வீழ்த்தினார். பின்னர், அந்த அணியில் உருவாக்கிக்கொண்டிருந்த மிடில் ஆர்டர் பார்ட்னர்ஷிப்பை உடைத்து மற்ற விக்கெட்டுகளை சாய்த்தார்.

இங்கிலாந்து கவுண்டி அணியில் இணைந்த 4வது இந்திய வீரர் என்கிற பெருமையை பெற்ற வாஷிங்டன் சுந்தர் (லங்காஷயர்), தொடக்க ஆட்டத்திலே அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முகத்தில் புன்னகையை தவழ விட்டுள்ளது. மேலும், அவர் விக்கெட் வீழ்த்திய வீடியோக்களை லங்காஷயர் அணி அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், தற்போது அந்த வீடியோக்கள் கிரிக்கெட் ரசிர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
That is ridiculous, @luke_wells07! 🤯
— Lancashire Cricket (@lancscricket) July 19, 2022
A third for @Sundarwashi5 👏
🌹 #RedRoseTogether https://t.co/b8kJigt3ZI pic.twitter.com/vGVxeh86pe
🔥🇮🇳 @Sundarwashi5
— Lancashire Cricket (@lancscricket) July 19, 2022
🌹 #RedRoseTogether https://t.co/y5EQfe48U5 pic.twitter.com/Hhy8aT10YP
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil