வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டிவென்டி 20 கிரிக்கெட் தொடருக்கான அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், டிவென்டி20 அணியில் இடம்பெறும் இளம்வயது வீரர் என்ற பெருமையை, வாஷிங்டன் சுந்தர் (19) பெறுகிறார்.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய அணி முன்னதாக, 2 போட்டிகள் கொண்ட டுவென்டி 20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கும் இந்த தொடரில் இருந்து குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம், இந்திய டிவென்டி20 அணியில் இடம்பெறும் இளம்வயது வீரர் என்ற பெருமையை, வாஷிங்டன் சுந்தர் (19) பெறுகிறார்.
ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், கிருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் என 4 ஸ்பின்னர்களோடு இந்திய அணி, இத்தொடரை சந்திக்க உள்ளது.
இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது, இந்த இளம்வயதிலேயே இந்திய அணியில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணியில் தொடர்ந்து நீடிப்பதற்காக கடின பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். 2018ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக நிடாஹாஸ் டி20 தொடருக்காக, இந்திய ஏ அணியில் விளையாடி உள்ளேன். அந்த தொடரில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. தற்போது மீ்ண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளேன். காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளேன். இந்த தொடரில் சாதித்து, இந்திய அணியில் நிலையான இடம் பிடிப்பேன் என்று வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.