Washington Sundar ruled out of IPL 2023 Tamil News: 10 அணிகள் பங்கேற்று வரும் 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5ல் தோல்வி, 2ல் வெற்றி என 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் உள்ள வீரர்கள் ஒருசேர சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பட்டியலில் முன்னிலை பெறலாம்.
இந்நிலையில், இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
🚨 INJURY UPDATE 🚨
— SunRisers Hyderabad (@SunRisers) April 27, 2023
Washington Sundar has been ruled out of the IPL 2023 due to a hamstring injury.
Speedy recovery, Washi 🧡 pic.twitter.com/P82b0d2uY3
அந்த அணியின் ஆல்ரவுண்டர் வீரராக செயல்பட்டு வந்த வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நடப்பு தொடரில் இரு வெற்றிகளை மட்டும் பெற்றுள்ள அந்த அணிக்கு மேலும் பின்னடைவைக் கொடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil