worldcup 2023 | pakistan-vs-england | new-zealand-vs-sri-lanka | wasim-akram: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமேஅரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து சுருண்டது.
172 ரன்கள் வெற்றி இலங்கை துரத்திய நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 23.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட 99.9 சதவீதம் உறுதிப்படுத்தி விட்டது.
ஆபத்தில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு
/indian-express-tamil/media/post_attachments/eaded9ef-ded.jpg)
இதில் மீதமுள்ள ஒரு சதவீதம் தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு உள்ளது. நியூசிலாந்து 10 புள்ளிகள், +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 8 புள்ளிகள், +0.036 ரன்ரேட்டுடன் 5-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 8 புள்ளிகள், -0.338 ரன்ரேட்டுடன் 6-வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான் மீதமுள்ள ஒரு போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் நிலையில், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை 13 ரன்னுக்கு ஆல்-அவுட் செய்ய வேண்டும். இதேபோல், பாகிஸ்தான் 400 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்தை 112 ஆல்-அவுட் செய்ய வேண்டும். பாகிஸ்தான் 450 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்தை 162க்கு ஆல் அவுட் செய்ய வேண்டும்.
/indian-express-tamil/media/post_attachments/E3ZI3BdA9GxHQC4miuCn.jpg)
பாகிஸ்தான் 500 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்தை 211க்கு ஆல் அவுட் செய்ய வேண்டும். மொத்தத்தில் இங்கிலாந்தை கிட்டத்தட்ட 273 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அல்லது இங்கிலாந்து அணி கொடுக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
செம்ம ஐடியா கொடுத்த வாசிம் அக்ரம்
இந்நிலையில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் சூப்பர் ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக 'ஏ ஸ்போர்ட்ஸ்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணி முதல் பேட்டிங் செய்து நல்ல இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க வேண்டும். அதன்பின் இங்கிலாந்து அணியை டிரஸ்ஸிங் ரூமில் வைத்து பூட்டி வைத்து, டைம் அவுட் செய்ய வேண்டும் என்று கிண்டல் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“