Advertisment

'ஒரு நாளைக்கு 8 கிலோ மட்டன் தின்பது போல்... ஃபிட்னஸ் டெஸ்ட் எங்கே?': வசைபாடிய வாசிம் அக்ரம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி வீரர்களை முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கடுமையாக வசைபாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Wasim Akram lashes out after Pakistan embarrassing loss to Afghanistan  Tamil News

பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடி 5 போட்டிகளில் 2ல் வெற்றி 3ல் தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

Pakistan vs Afghanistan | worldcup 2023 | Wasim Akram: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று திங்கள்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.  

Advertisment

தொடர்ந்து 283 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 286 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. 

பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடி 5 போட்டிகளில் 2ல் வெற்றி 3ல் தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு இன்னும் அணிக்கும் 4 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அதில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்து விடும். 

வசைபாடிய வாசிம் அக்ரம்

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியின் மீது முன்னாள் வீரர்கள் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அவ்வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக வசைபாடியுள்ளார். 

தனியார் டி.வி சேனலிடம்  விரக்தியடைந்து பேசிய வாசிம் அக்ரம், "இன்று மிகவும் சங்கடமாக இருந்தது. இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 280 ரன்கள் கொண்ட இலக்கை எட்டுவது மிகவும் பெரியது. ஈரமான பிட்ச் கூட இல்லை. வீரர்களின் பீல்டிங், உடற்தகுதி நிலைகளை நீங்களே பாருங்கள். 

கடந்த 3 வாரங்களாக இதைப் பற்றி தான் நாங்கள் இங்கு உட்கார்ந்து அலறிக் கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களில் ஒரு ஃபிட்னஸ் டெஸ்ட் கூட எடுக்கப்படவில்லை. நான் ஒவ்வொரு வீரரையும் குறிப்பிட்டு கூறினால் அவர்களது முகம் சுருங்கிப் போய்விடும். இந்த வீரர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு 8 கிலோ ஆட்டிறைச்சி சாப்பிடும் ஒருவரைப் போல் உள்ளனர். அவர்களுக்கு ஒரு ஃபிட்னஸ் டெஸ்ட் கூட வைக்க கூடாதா? 

நாட்டுக்காக  விளையாடுவதற்கு அவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. எனவே, குறிப்பிட்ட ஏதாவது ஒரு அளவுகோல் இருக்க வேண்டும். பயிற்சியாளராக இருந்தபோது மிஸ்பா அந்த அளவுகோலை வைத்திருந்தார். வீரர்கள் அவரை வெறுத்தனர். ஆனால் அது வேலை செய்தது. ஃபீல்டிங் என்பது உடற்தகுதி பற்றியது, அங்குதான் குறைபாடு உள்ளது. இப்போது நாம் அது நடந்தால் இது நடக்கும், அது நடக்கவில்லை என்றால் இது நடக்கும் என்று பிரார்த்தனை செய்யும் நிலையை அடைந்துள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup Pakistan vs Afghanistan Wasim Akram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment