இந்தியா, இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டியில் புரபோஸ் செய்த காதல் ஜோடி! வாழ்த்திய வீரர்கள்

'Yes' சொல்லி அந்த நபரை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார்

திருமணம் என்பது சொர்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று சொல்வார்கள். ஆனால், இங்கு ஒரு ஜோடி, கிரிக்கெட்டின் சொர்க்கமான லார்ட்ஸ் மைதானத்தில் தங்களது திருமணத்தை நிச்சயம் செய்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 322 ரன்கள் குவிக்க, சேஸிங் செய்த இந்திய அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றிப் பெற்றது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் செய்துக் கொண்டிருந்த போது, 24வது ஓவரை சாஹல் வீசத் தயாரானார். அப்போது, திடீரென கேமராக்கள் அனைத்து பார்வையாளர்களை நோக்கி திரும்ப, அங்கு சரண் கில், பவன் பெய்ன்ஸ் என்ற இளம் ஜோடி அமர்ந்திருந்தது. அப்போது, காதலர் எழுந்து அந்த பெண்ணுக்கு மோதிரத்தை திறந்து காண்பித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு புரபோஸ் செய்தார். இவை கேமிராவில் படம் பிடிக்கப்பட்டு, பிக் ஸ்க்ரீனிலும் ஒளிபரப்பானது. வீரர்களும் அதனைக் கவனித்தனர். கமெண்ட்ரியில் ‘Decision Pending’ என்ற வர்ணிக்க, இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண், மோதிரத்தை பார்த்தவுடன் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று, ‘Yes’ சொல்லி அந்த நபரை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார்.

இதனைப் பார்த்த யுவேந்திர சாஹல் உட்பட சில கிரிக்கெட் வீரர்களும் கைத்தட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஜோடியின் அருகில் அமர்ந்து இருந்தவர்களும் அவர்களை வாழ்த்தினர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close