பெங்களூருவில் நடந்த கடைசி டி-20 போட்டியில் தோனியின் ஆட்டத்தை பார்த்து ஆஸ்திரேலியா வீரர் வாயை பிளந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டி-20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் கடந்த (பிப்.27) நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ராகுல் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின் வந்த தவான் (14), ரிஷப் பண்ட் (1) ஆகியோர் விரைவில் வெளியேறினர்.
பின்னர் வந்த தோனி, கேப்டன் கோலி உடன் சேர்ந்து கணிசமாக ரன்களைச் சேர்த்தார். ஆட்டத்தின் 11 ஓவரை ஆஸ்திரேலிய அணியின் ஸம்பா வீசினார். முதல் பந்தில் கோலி ஒரு ரன் எடுத்ததில், தோனி கிரீஸிற்கு வந்தார். 2வது பந்தை வீசுகையில், அது ஒய்டு பாலாகிப் போனது. அப்போது கிரீஸை விட்டு வெளியே வந்த தோனி, கீப்பரின் கைகளில் பந்து சிக்கியதைக் கண்டார்.
உடனே கிரீஸிற்கு செல்வதற்கு திரும்பினார். முதலில் பேட்டையும், அதைத் தொடர்ந்து தனது கால்களையும் கிரீஸின் உட்புறம் கொண்டு சென்றார். குறிப்பாக 2.14 மீ நீளத்திற்கு கால்களை விரித்து, அவுட் ஆகாமல் காத்துக் கொண்டார்.ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா வீசிய 12-வது ஓவரின் 2-வது பந்தில் தோனியை விக்கெட் கீப்பர் பீட்டர் ஹேண்ட்ஸ்ஹோம்ப் ஸ்டம்பிங் செய்ய முயற்சித்தார்.
ஆனால், அது நடக்கவில்லை. தோனி பந்தை மிஸ் செய்தாலும் 2.14 மீட்டர் அகலத்திற்கு தனது காலை எளிதாக விரித்து கிரீஸை தொட்டார். இவரின் திறமையைப் பார்த்து ஆடம் ஸாம்பா வாயைப் பிளந்தார்.
ஆனால், தோனியின் வெறித்தனமான ரசிகர்களுக்கு இது மூவ் புதிததல்ல. வழக்கம் போல் மைதானத்தில் இருந்த அவர்கள் ஆர்பரிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பிசிசி தோனி சரியாக காலை விரித்து கிரிஸை தொட்ட புகைப்படத்தில் தெளிவாக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.