ஒரு வீரரின் ஃபீல்டிங் எப்படி இருக்க வேண்டும்.... ஒரு விக்கெட் கீப்பரின் டைமிங் சென்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி ஒரு உதாரணம்.
41.6வது ஓவர். பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ். 31 பந்துகளில் 47 ரன்கள் அடித்து, இந்திய பவுலர்களை பீதியில் வைத்திருந்த மேக்ஸ்வெல் எதிர் முனையில்.
சைனாமேன் குல்தீப் யாதவ் ஒரு ஷார்ட் பந்துவீச, பேக்ஃபூட் எடுத்து பந்தை அறைந்துவிட்டு, கான்ஃபிடன்ட்டாக ரன்னிங் எடுத்தார் மார்ஷ். எதிர்முனையில் நின்றிருந்த மேக்ஸ்வெல்லும் ரன்னிங் கொடுக்க, சர்க்கிளில் நின்றிருந்த பந்து ஜடேஜா கையில் சிக்கியது.
சற்றும் தாமதிக்காத ஜடேஜா, தோனியை நோக்கி பந்தை வீசினார். உண்மையில், ஜடேஜா த்ரோ செய்த அந்த பந்து புல்லட் வேகத்தில் சென்றது. இங்கு தான் சம்பவமே.
மேக்ஸ்வெல் கிரீஸை நெருங்க மைக்ரோ நொடிகளே மீதமிருக்க, புல்லட் வேக பந்தை அப்படியே, கைகளால் ஸ்டம்ப்பை நோக்கி திருப்பிவிட்டார் தோனி. அதே புல்லட் வேகத்தில் பந்து ஸ்டம்ப்பை பதம் பார்க்க..... யெஸ், மேக்ஸ்வெல் ரன் அவுட்!.
இதை தோனி பெரிதாக கொண்டாடவில்லை என்றாலும், ஒட்டுமொத்த அரங்கமும் கொண்டாடித் தீர்த்தது. அதேசமயம், இது தோனிக்கு மட்டுமே கிரெடிட் தரக் கூடிய ரன் அவுட் அல்ல... ஜடேஜாவுக்கும் தான்!.
மேலும் படிக்க - இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ் கிரிக்கெட்