'இப்படியொரு விக்கெட்டை இதற்கு முன் பார்த்ததுண்டா யுவர் ஹானர்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WATCH: New Zealand batter dismissed in one of the most bizarre fashions - 'இப்படியொரு கன்றாவியான விக்கெட்டை இதற்கு முன் பார்த்ததுண்டா யுவர் ஹானர்?'

WATCH: New Zealand batter dismissed in one of the most bizarre fashions - 'இப்படியொரு கன்றாவியான விக்கெட்டை இதற்கு முன் பார்த்ததுண்டா யுவர் ஹானர்?'

கிரிக்கெட் களங்களில் எத்தனையோ ஆச்சர்யங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், இப்படியொரு சம்பவத்தை நாம் பார்த்திருக்கமாட்டோம்.

Advertisment

சிட்னியில் நடைபெற்ற கவர்னர் ஜென்ரல் XI கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஹீதர் கிரஹாம் வீசிய பந்தை, நியூசிலாந்து வீராங்கனை கேட்டி பெர்கின்ஸ் வேகமாக அடிக்கிறார்.

அந்த பந்து, எதிர்முனையில் நின்று கொண்டிருந்த சக வீராங்கனை கேட்டே மார்டினின் பேட்டின் மீது பட, அவர் நிலைத்தடுமாறி பேட்டை தவற விடுகிறார். அதோடு மட்டுமில்லாமல், அந்த பந்து அப்படியே பவுலர் ஹீதரின் கைகளில் வந்து தஞ்சமடைந்தது.

அவுட்!....

Advertisment
Advertisements

அடக்கடவுளே! 'இப்டிலாமா நம்ம தலையில எழுதியிருக்கு!' என்று நொந்து கொண்டே வெளியேறினார், பேட்டிங் செய்த அந்த வீராங்கனை.

இந்த வீடியோ இப்போது சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க - டீப் மிட் விக்கெட்டில் விஜய் ஷங்கரின் வாவ் கேட்ச்! கொண்டாடிய தோனி, கோலி (வீடியோ)

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: