/tamil-ie/media/media_files/uploads/2018/10/gwhbhdddhh.jpg)
ப்ரித்வி ஷா
விஜய் ஹசாரே அரையிறுதியில், தன்னை கேலி செய்ய நினைத்தவர்களுக்கு ப்ரித்வி ஷா கொடுத்த பதிலடி, வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ப்ரித்வி ஷா அசத்தல்:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது வாங்கிய இளம் வீரர் பிரித்திவி ஷா, விஜய் ஹசாரே போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிராஜ் தொடர்ந்து பவுன்சர்களாக வீசி வம்புக்கு இழுக்க, ப்ரித்வி ஷா கூலாக சிக்சர்களை பறக்கவிட்டு பதில் கூறினார்.
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது. இந்தத் தொடரில் 18 வயதே ஆன இளம் வீரர் ப்ரித்வி ஷா அறிமுகமானார்.
முதல் போட்டியிலேயே சதம் அடித்த அவர், மொத்தம் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை பெற்று கவனத்தை ஈர்க்க வைத்தார். சிறிய வயதிலேயே அவரது பேட்டிங் அபாரமாக உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கூறியிருந்தனர்.
— Mushfiqur Fan (@NaaginDance) 17 October 2018
இந்நிலையில், தற்போது மும்பை அணிக்காக விளையாடி வரும் ப்ரித்வி ஷா, ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிராஜ் வீசிய பந்தை எதிர்கொண்ட விதம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
— Mushfiqur Fan (@NaaginDance) 17 October 2018
ஆட்டத்தின் 19-வது ஓவரை வீசிய முகம்மது சிராஜ், பவுன்சர்களாக வீசித் தாக்கினர். முதல் இரண்டு பந்துகளை சமாளித்த ப்ரித்வி ஷா, மூன்றாவது பவுன்சரில் சற்று நிலை குலைந்தார். அப்போது, சிராஜ் ஏதோ கூற, பதிலுக்கு ப்ரித்வியும் ஏதோ பதிலளிக்க வாக்குவாதம் ஏற்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.