ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜடேஜா, ஒரு சிக்ஸர், பவுண்டரி உடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது ஸ்டேடியத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த அவரது மனைவியும், பாஜக எம்.எல்.ஏ.வுமான ரிவபா அவரின் பாதங்களை தொட்டு ஆசிர்வாதம் பெற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை, குஜராத் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் மழை குறுக்கீட்டதால் டார்கெட் 171 ரன்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி 2 பந்துகளில் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது ஜடேஜா தனது சிறப்புமிக்க இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.
அப்போது பேசிய ஜடேஜா, “என்னால் முடிந்தவரை கடினமாக ஆட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பந்து எங்கே போகும், நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை, கடினமாக ஸ்விங் செய்யப் பார்த்தேன்.
நான் என்னை ஆதரித்து நேராக அடிக்கப் பார்த்தேன், ஏனென்றால் அந்த வேகமான பந்துகளை மோஹித்தால் வீச முடியும் என்று எனக்குத் தெரியும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“