7 ஆண்டுகளுக்குப் பிறகு மைதானத்தை கலக்கிய ஸ்ரீசாந்த்: வீடியோ வைரல்

Watch Sreesanth takes his first wicket in T20 Match: பாண்டிச்சேரிக்கு எதிரான டி- 20 ஆட்டத்தில் ஸ்ரீசாந்தின் பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்தது.

By: January 12, 2021, 6:49:18 PM

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், 7 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடிய முதல் போட்டியில் தனது வழக்கமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட இவருக்கு தடைவிதிக்கப்பட்டது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு, உள்ளூர் அளவிலான சையத் முஷ்டாக் டி20 தொடரில் கேரளா அணிக்காக ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நேற்று பாண்டிச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரீசாந்தின் பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்தது.

 

 

7 ஆண்டுகளுக்குப் பிறகு, கிரிக்கெட் வாழ்கையில் மீண்டும் ஒரு விக்கெட்டை கைப்பற்ற ஸ்ரீசாந்துக்கு 7 பந்துகள் தேவைப்பட்டது. ஸ்ரீசாந்த் வீசிய அவுட் ஸ்விங்கரில் புதுச்சேரி அணி வீரர் ஃபேபிட் அகமது  வெளியேறினார்.

ஸ்ரீசாந்த் இந்த ஆட்டத்தில் 4 ஓவரில் 29 ரன் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். மேலும், தனது  ஓவர் முடிந்ததும் ஆடுகளத்தில் இருந்த பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான  ஸ்ரீசந்த் கடந்த 2007-ம் ஆண்டு முதல் டி20 உலக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்தார். இவர் 27 டெஸ்ட் போட்டிகளிலும், 53 ஒருநாள்  போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Watch sreesanth takes his first wicket after a gap of 7 years

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X