ஞாயிற்றுக்கிழமை இந்தூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் கேமரூன் கிரீன் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Watch: Suryakumar Yadav hits 4 back to back sixes off Cameron Green in 2nd ODI vs Australia
இந்திய இன்னிங்ஸின் 44வது ஓவரில் கேமரூன் கிரீன் பந்துவீச வந்தபோது இந்த சிக்சர் மழை பொழிந்தது. சூர்யகுமார் முதல் பந்திலேயே ஒரு பெரிய சிக்ஸரை ஒரு குறைபாடற்ற பிக் அப் ஷாட் மூலம் அடித்து கிரீனை வரவேற்றார். அடுத்த பந்திலும் அதே விளாசல், சூர்யகுமார் ஒரு சிறந்த ஸ்கூப்பைத் தேர்ந்தெடுத்தார், அது எல்லையைத் தாண்டி சிக்சரானது.
3வது பந்தில், சூர்யகுமார் டீப் எக்ஸ்ட்ரா கவரில் மற்றொரு சிக்ஸர் அடித்தார், பின்னர் 4 ஆவது பந்தையும் மற்றொரு சிக்சருடன் முடித்தார், அதை அவர் டீப் மிட்விக்கெட்டுக்கு மேல் தூக்கி அடித்தார். அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் 2 ரன்கள் எடுக்கப்பட்டதால், மொத்த ரன்கள் 26 ஆக உயர்ந்தது.
“27ஆம் தேதியைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்; உலகக் கோப்பைக்கான எங்கள் அணியை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம், அதில் சூர்யா இருக்கிறார்,” என்று மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.
"நாங்கள் அந்த முடிவை எடுத்துள்ளோம், நாங்கள் அவரை முழுமையாக ஆதரிக்கிறோம், ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட தரம் மற்றும் திறன் அவருக்கு உள்ளது, அதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆம், டி20 கிரிக்கெட்டில் தற்போது அந்த குணங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம், ஆனால் அவரைப் போன்ற ஒரு வீரர் ஆறாவதாக பேட்டிங் செய்யக்கூடிய தாக்கத்தையும் நாங்கள் அறிவோம்,” என்று ராகுல் டிராவிட் கூறினார்.
"அவர் ஒரு ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும், எனவே நாங்கள் அவரை முழுமையாக ஆதரித்துள்ளோம். நாங்கள் அதைப் பற்றி மிகவும் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் அவருக்கு முற்றிலும் பின்னால் இருக்கிறோம் என்பதில் முழுமையான தெளிவு உள்ளது, மேலும் அவர் சிறப்பாக விளையாட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் ராகுல் டிராவிட் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“