Sports Tamil News: குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 105 வயது மூதாட்டியான ராம்பாய் கலந்து கொண்டார். ராம்பாய், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் தனிநபராக கலந்து கொண்ட நிலையில், அவர் 100 மீட்டர் இலக்கை 45.40 வினாடிகளில் எட்டி புதிய சாதனையை படைத்தார்.
மேலும் அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை 1 நிமிடம் 52.17 வினாடிகளில் கடந்து அசத்தினார். அதோடு, உலக மாஸ்டர்ஸ் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 74 வினாடிகளில் ஓடி தங்கம் வென்ற 101 வயதான மான் கவுரின் சாதனையை ராம்பாய் முறியடித்தார்.
இந்த உலகில் சாதனைகளை படைக்க வயது ஒன்றும் விதிவிலக்கல்ல. அவை வெறும் எண்கள் தான் என்று கூறுவார்கள். அதற்கேற்ப, ராம்பாய் தடகள போட்டியில் தனிநபராக கலந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். தனது 105 வயதிலும் சாதனை தாகத்தை தீர்க்க இந்தியா முழுதும் ஓடி வரும் ராம்பாய் நம்மில் பலருக்கு முன்னோடியாக இருக்கிறார்.

1917ஆம் ஆண்டும் பிறந்த “சூப்பர் நானி” ராம்பாய், கடந்த ஆண்டு நவம்பரில் வாரணாசியில் தனது ஓட்டப்பந்தய அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டார். அதன் பின்னர் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளாவில் நடந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு நிறைய பதக்கங்களை வென்றுள்ளார். அவரை இதுபோன்ற போட்டிகளுக்கு அவரது பேத்தி ஷர்மிளா சங்வான் தான் அழைத்துச் செல்வாராம்.
அவர் ஏன் முன்னதாக இதுபோன்ற ஓட்டப் பந்தயங்களில் போட்டியிடவில்லை என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, “நான் எப்போதும் தயாராகவே இருந்தேன், ஆனால் இதற்கு முன் யாரும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை!” என்று தெரிவித்து இருக்கிறார். இப்போட்டியில் பதக்கம் வென்றது குறித்து அவர் பேசுகையில், “இது சிறப்பான உணர்வாக உள்ளது. இனி சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
At 105 years, super grandma sprints new 100m record. #Rambai ran alone in #Vadodara as there was no competitor above 85 competing at the National Open Masters Athletics Championship pic.twitter.com/iCIPTOkuFt
— TOI Bengaluru (@TOIBengaluru) June 21, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil